மார்ச் 24, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், பெரியசோரகை கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது 30). இவர் அப்பகுதியில் வசித்து வந்த 25 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். காதலிக்கும்போது வார்த்தைகளை அன்பாக தொடுத்து பார்த்துப்பார்த்து பேசிய சுரேஷ் குமார், திருமணமான 4 ஆண்டுகள் கழித்து தனது சுயரூபத்தை காண்பிக்க தொடங்கி இருக்கிறார்.

பெற்றோரை எதிர்த்த காதல் திருமணத்தில் நடந்த சோகம்: அதாவது, தனது காதல் மனைவியை கடுமையாக தாக்கி, அவரின் தாய் வீட்டிற்கு சென்று நகை மற்றும் பணம் வாங்கிவருமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு தற்போது வரை குழந்தையும் இல்லை. தனது அக்காவின் நிலையை அறிந்த பெண்ணின் தங்கையான 21 வயது இளம்பெண், சம்பவத்தன்று (Young Girl Abused By Sister Husband) அக்காவை பார்க்க சென்றுள்ளார். அச்சமயம் அக்கா வீட்டில் இல்லை. சுரேஷ் குமார் அங்கு இருக்க, காதல் மனைவியின் தங்கை என்றும் பாராது பலவந்தமாக வீட்டில் அடைத்து அவரை பலாத்காரம் செய்து இருக்கிறார். Chewing Gum Helps to Find Rape Accuse: 19 வயது இளம்பெண் கற்பழித்துக்கொலை.. 40 ஆண்டுகள் கழித்து குற்றவாளி சிக்கியது எப்படி?.. விபரம் உள்ளே.! 

Sexual Harassment / Rape File Pic (Photo Credit: Pixabay)

கொழுந்தியாளை துணித்து பலாத்காரம் செய்த கயவன்: இந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துவைத்து, இவை சமூக வலைத்தளத்தில் வெளியாகாமல் இருக்க தான் கூப்பிடும்போதெல்லாம் தன்னுடன் வந்து படுக்கையை பகிர வேண்டும் என பகிரங்கமாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இதனால் செய்வதறியாது திணறிய இளம்பெண்ணை சுரேஷ் குமார் பலமுறை பலாத்காரம் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். குழந்தை இல்லாததால், நான் உன் தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்கிறேன் என கூறியவர், நாம் மூவராக வேறு ஊருக்கு சென்று மகிழ்ச்சியாக வாழலாம் என எண்ணி தெரிவித்துள்ளார்.

தங்கைக்கு நடந்த கொடுமையை அறிந்த அக்கா: இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சுரேஷ் குமாரின் மனைவி, கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் மனைவியை தாக்கி வீட்டில் இருந்து விரட்டி இருக்கிறார். தனது தாய் வீட்டிற்கு கண்ணீருடன் சென்ற சுரேஷின் மனைவிக்கு பேரதிர்ச்சியாக தனது தங்கைக்கு நேர்ந்த கொடுமையும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அக்கா-தங்கை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், தலைமறைவான சுரேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கற்பழிப்பு, அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல் போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்டால், பெண்கள் தங்களின் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம். உங்களின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும். எக்காரணம் கொண்டும் காம மிருகத்தின் வக்கிர புத்திக்கு இணங்காதீர்கள்.