Chandrayan 3 Update: நிலவு வட்டப்பாதைக்குள் நுழைந்தது சந்திராயன்; நிலவின் அசத்தல் தோற்றம் இதோ.! வீடியோ உள்ளே.!
புவியின் வட்டப்பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நேற்று சந்திராயன் நுழைந்த நிலையில், சந்திராயன் 3 நிலவை சுற்றி வருகிறது.
ஆகஸ்ட் 07, பெங்களூர் (Bangalore): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (ISRO) இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி மதியம் 02:35 மணியளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் சந்திராயன் 3 (Chandrayan 3) விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
40 நாட்கள் பயணத்திற்கு பின்னர் சந்திராயன் 3 நிலவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. புவியின் வட்டப்பாதையில் பூமியை சுற்றியவாறு சந்திராயன் 3 பயணம் செய்தது. Bajaj Finance Scam: வயதானவர்கள் தான் டார்கெட்; ஓ.டி.பி-யில் லோன் எடுத்ததாக பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல்.. பஜாஜ் பைனான்ஸ் பயங்கரங்கள்.!
புவியின் வட்டப்பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் நேற்று சந்திராயன் நுழைந்த நிலையில், சந்திராயன் 3 நிலவை சுற்றி வருகிறது. இம்மாத இறுதிக்குள் சந்திராயன் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு இரவு பகலாக சந்திராயனின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்திராயன் 3 தற்போது நிலவில் எடுத்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.