Twitter DM: ட்விட்டர் வெரிஃபைட் நபர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட எலான் மஸ்க்.. இனி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம்.!
வெரிபைடு ஐ.டி உபயோகம் செய்வோர் இனி தங்களை பின்தொடர நபர்களுக்கும் டி.எம் மூலமாக மெசேஜ் அனுப்பலாம்.
ஜூன் 12 , சான் பிரான்சிஸ்கோ (Technology News): சர்வதேச அளவில் 353.90 மில்லியன் நபர்கள் உபயோகம் செய்யும் வலைத்தளங்களில் ட்விட்டர் (Twitter Update) முக்கியமானது. அதனை கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அமைப்புகள் முன்னேற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பு முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வெரிபைட் புளூ டிக் (Twitter Verified Customers) பணத்திற்கு கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இன்றளவில் பலரும் மாதம் மற்றும் ஆண்டு சந்தா மூலமாக அதனை பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக பணம் செலுத்துவோருக்கு முன்னுரிமையாக பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. Attack on Dutch Vlogger: நகரின் அழகை படம்பிடித்த டச்சு வி-லாகர் மீது சரமாரி தாக்குதல்; பெங்களூரில் பகீர் சம்பவம்.!
இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இனி பணம் செலுத்தி புளூ டிக் பெற்றுக்கொண்டவர்கள், தங்களது இன்பாக்சில் இருந்து தங்களை பின்டதொடராத நபருக்கும் மெசேஜ் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஸ்பேம் மெசேஜ்களை படிப்படியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
சமீபத்தில் ட்விட்டர் மூலமாகவும் இனி சம்பாதிக்க வழிவகை செய்ய ஏற்பாடுக நடைபெறுகிறது என எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், பல யூடியூப் மற்றும் பேஸ்புக் சம்பாத்திய ஆர்வலர்கள் ட்விட்டர் பக்கமும் களமிறங்க தொடங்கியுள்ளனர்.