iPhone List with Offer Flipkart: ஐபோன் பிரியரா?.. ஐபோனை வாங்க நினைப்பவரா?.. பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டே-வில் அசத்தல் ஃஆபர். விபரம் உள்ளே.!
இவற்றுக்கு 13% முதல் 22% வரை ஃஆபர் கொடுக்கப்படுகிறது.
அக்டோபர் 12, மும்பை (Technology News): பிளிப்கார்ட் (Flipkart Big Billion Days Sale 2023) தளத்தில் சலுகை விலையில் பொருட்களை வாங்க, திருவிழா கொண்டாட்டமாக சிறப்பு விற்பனை நாட்கள் தொடங்கியுள்ளது. இதனால் பலகோடி மக்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை தள்ளுபடி விலையில் வீட்டில் இருந்தபடி வாங்கி வருகின்றனர்.
ஸ்மார்ட்போன் புதிதாக வாங்க நினைத்த பலருக்கும், இந்த ஃஆபர் பெரிதும் உதவியது. பலரும் தங்களின் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ் முறையில் மாற்றி, புதிய ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர். தற்போது, பிளிப்கார்ட்டில் அக்.08ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை (இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன) சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிளிப்கார்ட்டில் iPhone 11, iPhone 12, iPhone 13, and iPhone 14 ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றுக்கு 13% முதல் 22% வரை ஃஆபர் கொடுக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 12 64 GB (iPhone 12 64GB Black) மாடல் கருப்பு நிறத்தில் 13% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 புளூ 128 GB (iPhone 13 Blue 128GB) 13% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இரண்டு ரக ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையோடு ரூ.42,999 மற்றும் ரூ.51,999 க்கு வாங்கலாம். Kabaddi player Snehal Shinde: தந்தையின் கனவை நனவாக்கி, தங்கப்பதக்கதுடன் நாடு திரும்பிய மகள்: ஆனந்தக்கண்ணீரில் தந்தை.!
ஐபோன் 14 மாடல் ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 14 256GB (iPhone 14 256GB) மாடல் ரூ.66,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் அசல் விலை ரூ.79,900 ஆகும். ஐபோன் 12 128GB (iPhone 12 128GB) ஸ்மார்ட்போன் ரூ.54,999ல் இருந்து ஃஆபர் காரணமாக ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 14 ப்ளஸ் (iPhone 14 Plus) 128 GB மாடல் ரூ.79,900ல் இருந்து 17% ஃஆபருடன் ரூ.65,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 14 (iPhone 14) ஸ்மார்ட்போன் ரூ.69,900ல் இருந்து 18% ஆஃபருடன் ரூ.56,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) ஸ்மார்ட்போனுக்கு 19% தள்ளுபடி செய்யப்படுகிறது. iPhone 14 Red, iPhone 14 Midnight மற்றும் iPhone 14 Pro Max ஆகியவற்றுக்கு எக்சேஞ்ச் ஃஆபர் இல்லை.
Phone 6s Plus, iPhone 7, iPhone 8, iPhone 8 Plus ஆகிய ஸ்மார்ட்போன்களும் நல்ல ஆஃபருடன் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக ஐபோன் 13 512 GB (iPhone 13 512GB Models) ஸ்மார்ட்போன் 22% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.89,900 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ரூ.69,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 (iPhone 13 Mini) மினிக்கு 20% ஃஆபர் வழங்கப்படுகிறது.