Twitter Down: மீண்டும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட ட்விட்டர்; பயனர்கள் அவதி.!
ட்விட்டர் நிறுவனத்தின் கெடுபிடிக்க அதிகரிக்க தொடங்கி பயனர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழிநுட்ப கோளாறு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 17, புதுடெல்லி (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து, அவரின் செயல்முறை திட்ட மதிப்பீடுகள் மற்றும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியது.
பயனர்களுக்கு புளூ டிக் விற்பனைக்கு கொண்டு வந்தது, பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு சலுகைகள், பணம் செலுத்தாதோருக்கு கெடுபிடி, ட்விட்டர் நிறுவன பணியாளர்களின் அதிரடி பணிநீக்கம் என சர்ச்சைகள் தொடருகின்றன. Truck SUV Collision: கார் – கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி.!
இவ்வாறான நிலையில் இறுதியாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் இடுகைகள் பார்வையிடுவதில் வரம்பை நிர்ணயம் செய்ததில் இருந்து பல சந்தாதாரர்கள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற தொடங்கி மாற்று செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் நேற்று சர்வதேச அளவில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பயனர்கள் தங்களின் இடுகைகளை அனுப்ப இயலாமல், அதனை பார்வையிட இயலாமல் அவதிப்பட்டுள்ளனர். பின் அவை விரைந்து சரி செய்யப்பட்டன.