Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!
அமெரிக்காவின் முக்கிய சி.இ.ஓ-களுடன் வட்ட மேசை உரையாடலில் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.
செப்டம்பர் 24, டெலாவாரே (World News): இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு (Quad Summit), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi), 21ம் தேதி அமெரிக்கா சென்றார். குவாட் உச்சி மாநாட்டில் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் இரண்டு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அவை, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆகியவை ஆகும்.
மேலும் மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் 297 பழங்கால சிலைகளை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது. அந்த வகையில் 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 578 சிலைகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டு உள்ளன. Savings vs Current Account: சேவிங்ஸ் அக்கவுண்ட் VS கரண்ட் அக்கவுண்ட்.. வித்தியாசம் என்ன தெரியுமா?!
வட்ட மேசை உரையாடல்: இந்த நிலையில், நியூயார்க்கில் உலகின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் இந்தியாவில் முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த வட்ட மேசை உரையாடலில் கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை (Sundar Pichai,CEO Google), ஐ.பி.எம்., நிறுவன சி.இ.ஓ அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுந்தர் பிச்சை உரை: இதில் பிரதமர் மோடி கூறியது குறித்து சுந்தர் பிச்சை கூறும்போது, “கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி சார்ந்த தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி ஊக்கம் அளித்தார். எங்களது பிக்சல் போன்கள் இந்தியாவில்தான் இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் இந்திய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். ஏஐ மூலம் இந்தியாவில் மாற்றம் கொண்டு வர விரும்புகிறார். ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். ஏற்கெனவே எங்களது நிறுவனங்களை பல்வேறு திட்டங்களை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளோம்” என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.