IPL Auction 2025 Live

IBM AI Robot: 7 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நிறுத்தம்; மனிதர்களுக்கு பதிலாக AI ரோபோட்களை வாங்க திட்டம்.!

கடந்த 2013 ம் ஆண்டு அமெரிக்க நிறுவனங்களில் தொடங்கிய AI ரோபோட்களின் பணி நியமனம், இன்றளவில் உலகளவில் ஒவ்வொரு நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

IBM | AI Robot (Photo Credit: Wikipedia Commons / Pixabay)

மே 02 , புதுடெல்லி (New Delhi): சர்வதேச வணிக இயந்திரங்கள் கழக நிறுவனம் (The International Business Machines Corporation), செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence திறனை சமீபத்தில் பயன்படுத்த ஆயத்தமானது. இந்நிறுவனத்தின் தலைமையகம் நியூயார்க் நகரில் இருக்கும் நிலையில், இந்தியாவிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை நிர்வாக பொறுப்பில் அரவிந்த் கிருஷ்ணா இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே கூகுள், முகநூல், ட்விட்டர், இன்போசிஸ், விப்ரோ உட்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Information Technology Companies) தனது வேலையாட்களை குறைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், IBM நிறுவனமும் தனது வேலையாட்கள் எடுக்கும் செயலை நிறுத்தி வைத்துள்ளது உறுதியாகியுள்ளது. Acid Attack Woman Died: கோவை நீதிமன்றத்தில் பெண்ணின் மீது ஆசிட் வீசிய விவகாரம்; ஒருமாத போராட்டத்திற்கு பின் பரிதாபமாக பலியான உயிர்.!

மொத்தமாக சுமார் 7,800 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோட்களை (AI Robots) காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ள IBM நிறுவனம், அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தேவையான பணியிடங்களில் AI ரோபோட்களை பணி நியமனம் செய்வதன் மூலமாக, அங்கு விரயமாகும் மனித உற்பத்தியை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. IBM நிறுவனம் தற்போதைய நிலையில் 2,60,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3,900 பணியாளர்களை பணியில் இருந்து நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.