Cyber Security Alert: தீபாவளி ஆபர், சலுகை விலை ஆபர் வருகிறதா மக்களே?.. மோசடி செயல்கள் அதிகரிப்பு.. உஷார்.!
அறிமுகம் இல்லாத விளம்பரங்களை சமூக வலைதளபக்கத்தில் பார்த்தால், அதன் உண்மைத்தன்மை தெரியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
நவம்பர் 05, சென்னை (Technology News): இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. வீதிவீதியாக சென்று மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்து, தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உட்பட பல இணையப்பக்கங்களில் தீபாவளி ஆபர் என சலுகை விலையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்து ஆர்டர் செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தி.நகர் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில், வார இறுதி விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் திரளாக திருவிழா போல இருக்கும். இவை ஒருபுறம் இருக்க, மக்களின் அறியாமை மற்றும் சலுகை விலை உட்பட பல காரணிகளை முன்வைத்து இணையவழியிலும் திருட்டு செயலில் ஈடுபடும் கூட்டம் செயல்பட்டு வருகிறது. Delhi Air Pollution: டெல்லியில் விஸ்வரூபம் எடுத்த காற்றுமாசு பிரச்சனை; திணறும் மாநில அரசு.. மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை.!
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சலுகை விலையில் வெளியில் கிடைக்காத ஒரு ஆச்சரியமான விலைக்கு பட்டாசுகளை தருவதாக, பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையும் நடப்பதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
அதேபோல, அறிமுகம் இல்லாத விளம்பரங்களை சமூக வலைதளபக்கத்தில் பார்த்தால், அதன் உண்மைத்தன்மை தெரியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஒருவேளை மோசடி அழைப்புகளை பெற்றாலோ, பணத்தை இழந்தாலோ உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.