Apple's State-Sponsored Attack Message: எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போனை உளவுபார்த்த மத்திய அரசு?.. குற்றச்சாட்டும்-ஆப்பிளின் விளக்கமும்.!

ஆப்பிள் செல்போனை ஹேக் செய்வது கடினம் எனினும், தற்போதைய உளவு விவகாரம் குறித்து 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறித்து ஆப்பிள் நிறுவனமே விசாரணை செய்து வருகிறது.

Apple Alert Issue | Apple Logo (Photo Credit: X / Pixabay)

அக்டோபர் 31, புதுடெல்லி (Technology News): இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சந்தா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், பவன் கெஹரா, சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாருதீன் ஓவைஸி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகத்தில் நேரடி தொடர்புடைய இந்தியாவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியை சேர்ந்த புள்ளிகளின் ஆப்பிள் ஸ்மார்ட்போனுக்கு இன்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், தங்களின் ஆப்பிள் ஸ்மார்ட்போன் உள்ளூர் ஹேக்கர்கள் குழுவால் குறிவைத்து தகவல் திருட்டு தொடர்பான விசயங்கள் நடைபெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக்கண்ட எதிர்க்கட்சிகள் பேகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் போல, தங்களின் ஆப்பிள் ஸ்மார்ட்போனை ஆளும்கட்சி ஒட்டுக்கேட்பதாவும், தங்களின் தனிப்பட்ட தகவலை திருடுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இதனால் மீண்டும் இந்தியாவில் உளவு விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. Mark Zuckerberg Trip With Daughter: 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாந்த மரத்தை கண்டு ரசித்த தந்தை - மகள்... மகளுடன் பயணம் செய்யும் மார்க்.! 

Ashwini Vaishnav (Photo Credit: @ANI X)

இந்த விசயத்திற்கு விளக்கம் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனமும், உளவு விஷயத்தை மறுப்பது போல தகவலை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில், "எந்தவொரு அரசு ஆதரவளிக்கும் தாக்குதலுக்கும் ஆப்பிள் உடன்படவில்லை, அவ்வாறான செயலுக்கு வாய்ப்பில்லை. ஹேக்கர்களின் செயல்பாடுகள் எப்போதும் ஆப்பிளை நெருங்கியது இல்லை. ஆப்பிள் அனுப்பியதாக உள்ள குறுஞ்செய்திகள் 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எங்களின் தொழில்நுட்பக்குழு தொடர்ந்து தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைய ஆப்பிள் அறிவிப்பு தவறான அழைப்பாக இருக்கலாம் என நிர்ணயிக்கப்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்ப பிரச்சனையை எதிர்கொண்டது என பாஜக கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இன்று எல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இதுகுறித்த பேட்டியில், "நாங்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். கடந்த முறையும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை முன்வைத்து இருந்தது. நீதிமன்றம் முன் இவ்விசாரணை நடத்தப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பலரும், மக்களை திசைதிருப்ப இதுபோன்ற விஷயத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறான அரசியலை செய்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் 150 நாடுகளை சேர்ந்த பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது எனவும், அவை அனுப்பப்பட்டதற்கான காரணம் குறித்து தங்களால் தற்போது தெரிவுபடுத்த இயலவில்லை எனவும் கூறியுள்ளது. மதிப்பீடுகளின் அடிப்படையில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்பேற்க இயலும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.