Infinix Hot 50 5G: பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் இதோ..!
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 09, சென்னை (Technology News): இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G Smartphone) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விலை:
- இந்த ஸ்மார்ட்போன் 4GB + 64GB ரூ. 9,999 மற்றும் 8GB +128GB மாடலுக்கு ரூ. 10,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
- இது செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் Flipkart-யில் Dreamy Purple, Sage Green, Sleek Black மற்றும் Vibrant Blue நிறங்களில் பெறலாம். BSNL 5G: அசத்தல் அறிவிப்பு.. 5ஜி சேவைக்கான சோதனை முயற்சிகளை தொடங்கியது பிஎஸ்என்எல்.!
சிறப்பம்சங்கள்:
- இதில், 6.7-இன்ச் IPS LCD திரையுடன் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன், இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி MediaTek Dimensity 6300 செயலியால் இயக்கப்படுகின்றது.
- இது 8GB வரையிலான RAM மற்றும் 128GB சேமிப்புடன் வருகின்றது. மேலும், micro SD கார்டைப் பயன்படுத்தி 1TB வரை விரிவாக்கம் செய்யலாம்.
- இந்த ஸ்மார்ட்போன் Android 14-யை அடிப்படையாகக் கொண்டு Infinix-யின் XOS 14.5 ஸ்கின் இயங்குகிறது.
இதில், 5,000mAh பேட்டரி திறன்கொண்ட 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வந்துள்ளது.
- ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கு, 8MP முன்புற கேமரா உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)