Jio Book: லேப்டாப் பிரியர்களுக்கு நற்செய்தி; ரூ.16,499-க்கு அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கியது ஜியோ புக் லேப்டாப்.. விபரம் இதோ.!
4G சிம் பதியப்பட்ட ஸ்மார்ட் லேப்டாப், இந்திய மாணவர்களின் உபயோகத்திற்கு மிகச்சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 02 , புதுடெல்லி (Technology News): ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது தொழில்நுட்ப சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவாக மாறி பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் வரிசையில் கடந்த ஆண்டு Jio Book எனப்படும் Laptop அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் இரண்டாவது மாடல் இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4G சிம் பதியப்பட்ட ஸ்மார்ட் லேப்டாப், இந்திய மாணவர்களின் உபயோகத்திற்கு மிகச்சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 5000 mAh பேட்டரி திறனுடன் களமிறங்கியுள்ள ஜியோ லேப்டாப் 2023 ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை உபயோகம் செய்யும் திறன் கொண்டது.
ஜியோ புக் லேப்டாப் 2022ல் அறிமுகம் செய்யப்படும் போது ரூ. 15,799 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை கொண்ட Jio Book Model 2 (Jio Book 2023) லேப்டாப் ரூ.16,499 க்கு அறிமுகம் செய்யப்படுகிறது. Plane Crash On Road Video: நடுவானில் இருந்து நகரின் பரபரப்பு சாலையில் தரையிறங்கி விபத்திற்குள்ளான விமானம்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
ஜியோவின் புளூ நிறத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லேப்டாப்பை ரிலையன்ஸ் டிஜிட்டல் இ-காமர்ஸ் வெப்சைட்டிலும், அமேசான் போன்ற ஆன்லைன் நிறுவனத்திலும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். https://www.jiobook.com என்ற அதிகாரபூர்வ இணையத்திலும் ஆர்டர் செய்யலாம்.
Octa-Core Mediatek MT 8788 பிராஷசர், 4GB RAM 64 GB Storage, 256 GB வரை மெமரி கார்டு பயன்படுத்தும் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 990 கிராம் எடை மட்டும் கொண்டுள்ள ஜியோ புக் லேப்டாப் 4G Sim, Wi-Fi, Bluetooth 5, HDMI Port, 2MP வெப் கேமிரா