Laptop Buying Tips: லேப்டாப் வாங்க நினைக்கிறீங்களா? அசத்தல் டிப்ஸ்... இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க.!
Laptop Buying Tips in Tamil: மடிக்கணினி வாங்க நினைப்பார்கள், கட்டாயம் அதன் சிறப்பம்சங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் நமது வேலைகேற்ப அதனை தேர்வு செய்யலாம். லேப்டாப் டிப்ஸ்-ஐ விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
நவம்பர் 14, சென்னை (Technology Tips): படிப்பு, வேலை என பல விஷயங்களுக்காக இன்றளவில் மடிக்கணினி (Laptop) என்பது அத்தியாவசியமாகிவிட்டது. கடைகள் மற்றும் ஷோ ரூம்களில் பல்வேறு வகை பிராண்டுகள் இருக்கின்றன. இதில் நமக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப லேப்டாப்களை தேர்வு செய்வது நமது எதிர்கால படிப்பு, வேலைக்கு உதவியாக இருக்கும். இன்றளவில் கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்குகிறது. இது மாணவர்களின் படிப்புக்கு மட்டும் உதவும் வகையில், குறைந்த அளவிலான திறன் கொண்ட உயரிய படைப்பாக இருக்கும். இதன் சந்தை மதிப்பு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம். அதனை அரசு மாணவர்களுக்கு கொள்முதல் செய்து இலவசமாக வழங்குகிறது. இதனை கணினி சார்ந்த பணியில் இருப்போர் பயன்படுத்துவது சற்று சிரமமான விஷயம். ஏனெனில் அவர்களின் வேலைத்திறனுக்கு ஏற்ப இந்த வகை லேப்டாப்கள் தாக்குப்பிடிக்கும் அம்சத்துடன் இருக்காது. ஆகையால், லேப்டாப் வாங்கும்போது நாம் அதனை எதற்கு பயன்படுத்த போகிறோம், என்னென்ன ஆப்களை அல்லது சாப்டவேர்களை பயன்படுத்துவோம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். Electronics Safety Tips: இடி, மின்னல் நேரங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை ஆப் செய்ய வேண்டுமா?.. பாதுகாப்பு வழிமுறைகள்.!
லேப்டாப் வாங்கும்போது இந்த விஷயங்கள் முக்கியம் (Laptop Buying Tips You Should Know These Tips):
முதலில் ஒரு மடிக்கணினியை தேர்வு செய்யும்போது, அதன் OS வகையை கவனிக்க வேண்டும். Apple லேப்டாப்களில் Mac OS மட்டுமே வரும். பிற வகை லேப்டாப்களில் பெரும்பாலும் Microsoft OS வரும். OSல் பல வகைகள் இருந்தாலும், அதில் Microsoft மற்றும் Mac மட்டுமே பிரபலமானது ஆகும். Basic வேலை மற்றும் படிப்புகளுக்கு Microsoft போதுமானது. அதீத செயல்திறன், கேம் போன்றவைகளுக்கு Microsoft நல்லது. Processors பொறுத்த வரையில் Basic வேலைகளுக்கு i3, i5 நல்லது. 12வது ஜெனெரேசன் பாதிப்பு, 15 வது ஜெனரேஷன் போன்றவை அதிக வேலை, போட்டோ, வீடியோ எடிட்டிக்-க்கு நல்லது. Intel உட்பட பல்வேறு Coreகள் இருக்கின்றன. நாம் வாங்கும் லேப்டாப் மாடலுக்கு ஏற்ப கிராபிக்ஸ் கார்டு சேர்த்து எடுத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். அதேபோல, குறைந்தது 250 GB ஸ்டோரேஜ் இருப்பதை தேர்வு செய்வது நல்லது. லேப்டாப் ரேம் 8GB முதல் 16 GB நல்லது. போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங் வேலையில் இருப்பவர்கள் OLED டிஸ்பிளேவை பயன்படுத்தலாம். லேப்டாப் பயன்படுத்தும்போது 24 மணிநேரமும் சார்ஜ் போட்டுகொண்டு இருக்க கூடாது. 2 மணிநேரம் சார்ஜ் போட்டு, 3 மணிநேரம் வேலை பார்த்து பின் அதனை சுழற்சி முறையில் செயல்படுத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது. சார்ஜ் எந்த நேரமும் ஏறிக்கொண்டே இருந்தால் பேட்டரி சூடாகும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)