Lightning Electronics Safety Tips (Photo Credit : Freepik)

நவம்பர் 12, சென்னை (Technology News): பருவமழை காலங்களில் இடி, மின்னல், பலத்த காற்று போன்ற வானிலை மாற்றங்கள் சாதாரணமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் மின்னல் தாக்குதலின் போது அதிக உயர் வெப்பம் மற்றும் மின்சார அழுத்தம் காரணமாக மரங்கள் எரியும் நிலை கூட ஏற்படலாம். திறந்தவெளிகளில் மனிதர்கள் இவ்வாறான சூழ்நிலையில் சிக்கி இருந்தால் அவர்களுக்கும் உயிர் பாதிப்பு ஏற்படும். இவ்வாறான இடி, மின்னல் சமயங்களில் மின்சார சாதனங்களை பொதுவாக அணைத்து வைப்பது நல்லது என பலரும் கூறுவர். ஒரு சில நேரங்களில் மின்வாரியம் சார்பில் அதிக மின்னல் போன்ற சமயங்களில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் உயிரும் பாதுகாக்கப்படும். மின்கம்பங்கள் மற்றும் ட்ரான்ஸ்பார்மர் மீது மின்னல் எதிர்பாராத விதமாக விழும் பட்சத்தில் மின்சார பொருட்கள் பாதிக்கப்படலாம். Recharge Price Hike: டிசம்பரில் ஆப்பு.. ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ, வோடபோன்?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!

மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமா?

இதனால் அந்த பாதிப்பை குறைக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டித்து வைக்கப்படும். டிரான்ஸ்பார்மரில் மின்னல் விழுந்தால் நமது வீட்டு வரை வோல்டேஜ் அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படலாம். திடீரென அதிகரிக்கும் வோல்டேஜ் நமது வீட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை கடுமையாக பாதிக்கும். இதனை பவர் சர்ஜ் (Voltage Surge) என்று அழைக்கிறார்கள். அதிக மின்சாரம் காரணமாக டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், வைஃபை ரௌட்டர், கம்ப்யூட்டர் என ஸ்விட்ச் பாக்ஸில் கனெக்ஷனில் இருக்கும் அனைத்தும் பாதிப்பை சந்திக்கும். இதனால் மின்னல் சமயங்களில் இவ்வாறான பாதிப்புகளை குறைப்பதற்கு மின்சார பயன்பாடுகளை உடனடியாக துண்டிப்பது நல்லது.

அதிக வோல்டேஜ் பாதிப்பு:

மேலும் சுவிட்சுபோடுகளில் இருந்து வயர்களை தனியாக எடுத்து வைக்க வேண்டும். வீட்டுக்குள் ஈபி மீட்டர் போன்றவை இருந்தால் அதில் உள்ள ஈபி லைன் மற்றும் வீட்டு இணைப்புக்கான பகுதியை துண்டித்து வைக்கலாம். எந்த காரணம் கொண்டும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதன் பாயிண்ட்டில் இணையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை இணைந்திருந்தால் மின்னல் தாக்கும்போது அவை பாதிக்கப்படலாம். சில வீடுகளில் பவர் ஸ்டேபிளைசர் இருக்கலாம். பவர் ஸ்டேபிளைசராக இருந்தாலும் மின்னல் போன்றவற்றில் இருந்து அதனை பாதுகாத்துக் கொள்ளும் திறன் என்பது மிகவும் குறைவாக இருக்கும். ஆகையால் மழை பெய்யும் போது மின்னல் போன்றவை இருந்தால் கவனமாக இருப்பது நல்லது.