IPL Auction 2025 Live

WhatsApp Announcement: டிச. 31 முதல் வாட்சப் 49 ஸ்மார்ட்போன்களில் இயங்காது - புத்தாண்டு பரிசாக ஷாக் செய்தி கொடுத்த அறிவிப்பு..!

நமது நண்பர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிக்க நாம் உபயோகம் செய்து வந்த வாட்சப் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி செய்திதான் பழைய OS மொபைல் வாடிக்கையாளர்களை அதிரவைத்துள்ளது.

WhatsApp Template (PC: Pixabay)

டிசம்பர், 27: நமது நண்பர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிக்க நாம் உபயோகம் செய்து வந்த வாட்சப் (WhatsApp) நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி செய்திதான் பழைய OS மொபைல் வாடிக்கையாளர்களை அதிரவைத்துள்ளது.

கடந்த 2009 ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் & ஐபோன் (Android & iPhone) வைத்துள்ளவர்கள் எளிதில் நண்பர்களுக்கு மெசேஜ் செய்து பேசும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது வாட்சப். இந்த செயலி காலப்போக்கில் ஒவ்வொரு விசயத்திற்கும் அத்தியாவசியமாகி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., என ஸ்மார்ட்போன்களில் பிரதானமாக உள்ள செயலியாக மாறிவிட்டது.

இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல சிறப்பம்சத்துடன் வாட்சப் செயலி செயல்பட்டு வருகிறது. சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 மில்லியன் கோடி வாடிக்கையாளர்களால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. நண்பர்களுடன், குடும்பத்தினருடன் தனித்தனியே அல்லது குழுவாக பேச, அலுவலக செயல்பாடுகளை கவனிக்க என பலதரப்பட்ட வகையில் அவை உபயோகம் செய்யப்பட்டு வருகின்றன. Snow Storm America:விரட்டியடிக்கும் பனிப்புயலால் முடங்கும் அமெரிக்கா.. 60 பேர் பரிதாப பலி.. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பயங்கரம்.! 

Template: Smartphone

ஒவ்வொரு ஆண்டும் வாட்சப் தனது உட்கட்டமைப்புகளை புதுப்பித்து வரும் நிலையில், பழைய இயங்குதளங்களை (OS) கொண்ட ஸ்மார்ட்போன்கள் அவற்றுக்கு ஏற்ப அனுமதியை வழங்காது என்பதால், அவ்வாறான நிறுவனங்களில் வாட்சப் சேவையை அந்நிறுவனம் நிறுத்திக்கொள்வது இயல்பு.

அந்த வகையில் டிசம்பர் 31, 2022 க்கு மேல் 49 வகை செல்போன்களில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழைய ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள செல்போன்களின் விபரம் பின்வருமாறு..

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 06:56 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).