Mark Zuckerberg Trip With Daughter: 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாந்த மரத்தை கண்டு ரசித்த தந்தை - மகள்... மகளுடன் பயணம் செய்யும் மார்க்.!
இன்று உலகம் அறியும் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
அக்டோபர் 31, நியூயார்க் (Technology News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க், வெயிட் பிலைன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் மார்க் ஜுக்கர்பர்க் (Mark Zuckerberg). நாம் இன்றளவில் பிரதானமாக உபயோகம் செய்யும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப், திரெட்ஸ் ஆகிய வலைத்தளங்கள் அடங்கிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர்களின் ஒருவராகவும் இவர் இருக்கிறார்.
இவரின் 2023 சொத்து மதிப்பு அமெரிக்க மதிப்பில் 10,630 கோடி ஆகும். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 12.6 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். கடந்த 2004ம் ஆண்டு தனது கல்லூரி நண்பர்களுடன் உரையாட பேஸ்புக் தொடங்கப்பட்டு, 2012ல் அது பிரபலமானது. Bus Accident Students Died: வளைவுப்பகுதியில் அதிவேகம்; மினி பஸ் விபத்திற்குள்ளாகி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி.!
அதனைத்தொடர்ந்து கிடைத்த வருவாய்க்கு மார்க்கை அவரின் 23 வயதில் கவனிக்கும்படியான செல்வந்தர்களின் ஒருவராக மாற்றியது. அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச்சென்று, கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டவர் தான் மார்க். இன்று உலகம் அறியும் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
கடந்த 2012ல் ப்ரிசில்லா ஜான்(Priscilla Chan) என்பவரை திருமணம் செய்த மார்க்-க்கு தற்போது 3 குழந்தைகள் இருக்கின்றனர். தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 39 வயதாகும் மார்க், தனது மகளுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரத்தை இருவரும் கண்டு வியந்தனர்.