Thread App: இன்ஸ்டாகிராமை போல, ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய திரெட்ஸ் ஆப்.. 10 மில்லியன் பயனர்களை கடந்து பதிவிறக்கம்; விபரம் இதோ.!

இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

ஜூலை 06, தொழில்நுட்பம் (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அமைப்பு சார்ந்த மாற்றங்களை கொண்டு வந்தார். முதலில் அவரின் செயல்பாடுகள் வரவேற்கப்பட்டாலும், பின்னாட்களில் அவரின் கெடுபிடி அதிகரிக்க தொடங்கியது.

ட்விட்டரின் பல்வேறு செயல்பாடுகள் பணம் செலுத்தும் நபர்களுக்கு, பணம் செலுத்தாத நபர்களுக்கு என பிரித்து வழங்கப்பட்டது. சமீபத்தில் பார்வையாளர்கள் தங்களின் இடுகையை பார்ப்பதிலும் எண்ணிக்கை வைக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ட்விட்டர் பயனர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனிடையே, மெட்டா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் செயலியை போல திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்தார். ட்விட்டருக்கு மாற்றாக இவை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறினார். 30 Above Age Girls: 30 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

இதனால் மார்க் மற்றும் எலான் இடையே நேரடி தொழில் போட்டி வெளியுலகுக்கு தெரியவந்தது. இவ்வாறான சூழலில் திரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளவர்கள் நேரடியாக உபயோகம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரை போன்று ட்விட்டருக்கு மாற்றாக திரெட்ஸ் கொண்டு வரப்பட்டாலும், இன்ஸ்டாகிராம் செயலியை போலவே திரெட்ஸ் இருப்பதாக கருத்துக்கள் வருகின்றன. விரைவில் திரெட்ஸ் செயலியில் பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 10 மில்லியனுக்கும் அதிகமானோர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.