Meta Layoff: இந்தியாவின் முக்கிய நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்; மார்க்-கின் அதிரடியால் அலறும் வட்டாரம்.!

முகநூல், வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் ஒன்றிணைக்கப்பட்டு மெட்டா நிறுவனத்தின் கீழ் அவை கொண்டு வரப்பட்டதில் இருந்து பல மாற்றங்கள் தொடருகின்றன.

Meta Logo | Mark Zuckerberg (Photo Credit: Wikipedia Commons / Wikipedia)

மே 26, நியூயார்க் (Technology News): தனித்தனியே அறிமுகம் செய்யப்பட்ட முகநூல், வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் (WhatsApp, Facebook, Instagram) செயலிகளை ஒருங்கிணைந்து மெட்டா நிறுவனம் (Meta) உருவாக்கப்பட்டது. முகநூலின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான இருக்கும் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), பின்னாட்களில் இவைகளை ஒருங்கிணைத்து மெட்டா நிறுவனத்தை உருவாக்கினார்.

மெட்டா நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் அபரீத வளர்ச்சியை கண்டு இலாபம் அடைந்தாலும், சில நேரங்களில் அவை சரிவுகளையும் சந்திக்கின்றன. கடந்த சில மாதங்களாக மெட்டா நிறுவனத்தின் வணிகம் மற்றும் செயல்பாடுகளில் வேலை குறைந்து, அதன் விளைவாக பணிநீக்கம் தொடர்பான பிரச்சனை சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் (Meta Layoff) செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். 2020ல் அதிகப்படியான பணியாளர்கள் தனது வேலைகளை செய்து வந்த மெட்டா நிறுவனம், தற்போது பல்வேறு காரணங்களை எடுத்துரைத்து பணியாளர்களை அடுத்தடுத்து நிறுத்தி வருகிறது. Ban on Indian Students in Australia: இந்திய மாணவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்.. காரணம் என்ன?.. பரபரப்பு தகவல் அம்பலம்.! 

Meta (Photo Credit: Wikipedia)

நிறுவனத்தின் செலவு குறைப்பு, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை வாய்ப்புள்ள இடங்களில் பணியமர்த்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலமாக பணிநீக்கம் என்பது தொடருகிறது. மென்பொருள் பொறியாளர்களை தவிர்த்து பிற பணியில் இருந்தோர் அடுத்தடுத்து அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் பணியாளர்களை தேர்வு செய்த மெட்டா நிறுவனம், ஏப்ரலில் 4 ஆயிரம் பணியாட்களை பணிநீக்கம் செய்தது. கலிபோர்னியாவில் உள்ள மெட்டா நிறுவனத்தின் தலைமையகத்தில் பணியாற்றி வரும் 490 ஊழியர்களும் பணிநீக்கம் செய்ய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவை பொறுத்தமட்டில் மார்க்கெட்டிங் இயக்குனராக இருந்த அவினாஷ் பந்த் (Director of Marketing, Avinash Pant), மீடியா பட்னர்ஷிப் தலைவர் ஸகாத் ஜா சௌரப் (Saket Jha Saurabh, Director and Head of Media Partnerships) ஆகியோர் தங்களது பணியை இழந்துள்ளனர். பெரிய அளவிலான பொறுப்புகளில் இருப்போரையும் மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதால், சிறிய பொறுப்புகளில் இருப்போர் லேசான கலக்கம் அடைந்துள்ளனர்.