Meta Removes 63,000 Facebook Accounts: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 63000 முகநூல் கணக்குகள் நீக்கம்; மெட்டா அதிரடி.!
இளவயதுள்ள நபர்களை குறிவைத்து நடந்த மோசடியில், நைஜீரிய போலி முகநூல் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

ஜூலை 25, கலிபோர்னியா (Technology News): உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்களின் பேராதரவை பெற்ற பேஸ்புக் (Facebook) நிறுவனம், தற்போது மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. மெட்டா நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகளவில் பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகிய செயலிகள் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த செயலிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வரும் நிலையில், சர்வதேச மற்றும் நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப இயங்கி வருகிறது.
தொடரும் முறைகேடுகள்:
சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலவிதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், பெண்கள் (Sextortion Scam) மற்றும் அவர்களின் உருவம், போலியான கணக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் ஏராளம் என்றும் கூறலாம். நைஜீரியாவை சேர்ந்த கும்பல் ஒன்று தங்களின் நாட்டில் இருந்தும், இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு கல்வி உட்பட பல விசாக்களை முறைகேடாக பெற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
63000 முகநூல் கணக்குகள் நீக்கம்:
இதுதொடர்பான செய்திகள் மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபடுவோரின் கைது போன்ற நடவடிக்கைகள் அதற்கு அத்தாட்சியாக அமைந்து இருக்கிறது. இதனிடையே, முகநூல் நிறுவனம் சுமார் 63000 நைஜீரிய முகநூல் கணக்குகளை நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விஷயம் குறித்து முகநூல் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, பாலியல் விவகாரங்கள், பரிசுப்பொருட்கள் உட்பட பிற மோசடிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த 63000 நைஜீரிய முகநூல் கணக்குகள் கண்டதறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. Asteroid 2011 MW1 Speeding Towards Earth: மணிக்கு 29,000 கி.மீ. வேகத்தில்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. எச்சரிக்கை விடுத்த நாசா..!
புகார்களின் பேரில் அதிரடி:
மே மாதம் 2024 க்குள் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரிய கும்பல் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற பக்கங்களில் இருந்து பெண்களின் புகைப்படத்தை எடுத்து, அதனை தொழில்நுட்ப உதவியுடன் மாற்றி அமைந்து இளம்பெண்களை போல பேசி, பயனரை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் முகநூல் நிறுவனம் மேற்கண்ட நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
குழு அமைத்து ஒருங்கிணைந்து மோசடி:
இவ்வாறான மிரட்டலால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தையும் இழந்துள்ளனர். சில நேரத்தில் அவை தற்கொலை போன்ற துயரங்களுக்கும் வழிவகை செய்துள்ள காரணத்தால், மோசடி செயல்களால் ஏற்படும் குற்றங்களை தடுக்க முகநூல் நிறுவனம் தொடர்ந்து கடுமையான வகையில் செயல்படுவதன் அடிப்படையில் தற்போதைய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மோசடியாக பிரத்தியேக குழுவும் முகநூலில் தொடங்கி செயல்படுத்தப்ட்ட நிலையில், அதனையும் முகநூல் நிறுவனம் கண்டறிந்து நீக்கி இருக்கிறது.
உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தோ அல்லது வேறு ஒருவரின் ஆபாச படத்தை உங்களுக்கு அனுப்பியோ பணம் கேட்டு மிரட்டல் விடுத்தால், உடனடியாக உங்களின் எல்லைக்குட்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும். அல்லது மத்திய அரசின் நேரடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு இணையதளத்திற்கு என்று புகார் அளிக்கவும். மிரட்டல் ஆசாமிகள் செயல்களுக்கு பயந்தால் உங்களின் தரப்பில் இழப்பு ஏற்படும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)