ஜூலை 24, சென்னை (Technology News): விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியங்களுக்கு உள்ளானது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசாவுடைய (NASA) பங்களிப்பு என்பது முதன்மையானதாக இருக்கிறது. இந்நிலையில், பூமியை நோக்கி Asteroid 2011 MW1 என்ற சிறுகோள் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
2011 MW1 விண்கல்லின் விட்டம் 380 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு சுமார் 28,946 கிலோமீட்டர்கள் (28946 kmph) ஆகும். இந்த சிறுகோள் சுமார் 2.4 மில்லியன் மைல் தொலைவில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து நாசா துல்லியமாக கண்காணிக்கிறது எனவும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது, எனவே யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் நாசா அறிவுறுத்தியுள்ளது. Doctors Remove 16-Inch Bottle Gourd from Man's Rectum: ஒரேயொரு அறுவை சிகிச்சை.. ஒருவரின் வயிற்றிலிருந்து 16-இன்ச் சுரைக்காயை அகற்றிய மருத்துவர்கள் குழு!
நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் சிறுகோள்கள், பூமி (Earth) உள்ளிட்ட பல கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறான சிறுகோள்கள் (Asteroid) வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே நிறைய இருக்கின்றன. ஒரு சில சிறுகோள் மற்ற கிரகங்களின் மீது திடீரென மோதி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.