Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!
இந்தியாவில் ஷாங்க் ஏர் நிறுவனம் விமான சேவையை தொடங்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 24, லக்னோ (Technology News): இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான ஷாங்க் ஏர் (Shankh Airline), நாட்டில் சேவையை தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் (Ministry of Civil Aviation) அனுமதி வாங்கியுள்ளது. இந்த விமான நிறுவனம் உத்தரபிரதேசத்தை தளமாகக் கொண்டு, லக்னோ (Lucknow) மற்றும் நொய்டாவில் (Noida) மையங்களைக் கொண்டிருக்கும். மேலும், விமான சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன், விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அனுமதி பெற வேண்டும். Sundar Pichai: "ஏஐ குறித்த தெளிவான பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார்" கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை..!
உத்தரபிரதேசத்தில் இருந்து திட்டமிடப்பட்ட முதல் விமான சேவையாக இருக்கும். விமான நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான விமான சேவையை மேம்படுத்தவுள்ளது. ஷர்வன் குமார் விஸ்வகர்மா இதன் நிறுவனராக செயல்படுகின்றார். விமான சேவை செயல்படுவதற்கு வழங்கப்பட்ட என்ஓசி 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.