Moto Pad 60 Neo: மோட்டோ 5ஜி டேப்லெட் அறிமுகம்.. மோட்டோ பேட் 60 நியோ விலை, சிறப்பம்சங்கள் இதோ..!
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ பேட் 60 நியோ 5ஜி டேப்லெட் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
செப்டம்பர் 12, சென்னை (Technology News): மோட்டோரோலா சமீப காலமாக பட்ஜெட் விலையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது மோட்டோ பேட் 60 நியோ (Moto Pad 60 Neo 5G Tablet) 5ஜி டேப்லெட் மாடலை இன்று (செப்டம்பர் 12) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ள மோட்டோ பேட் 60 நியோ மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்பதிவில் பார்க்கலாம். Infosys Hiring: 20 ஆயிரம் புதியவர்களை பணியமர்த்த முடிவு.. நேர்காணல் செய்ய சீனியர் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த இன்போசிஸ்..!
மோட்டோ பேட் 60 நியோ விலை (Moto Pad 60 Neo Price):
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் விலை - ரூ.17,999.
- இது, பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (PANTONE Bronze Green) நிறத்தில் வெளிவந்துள்ளது.
- செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலாவின் இணையதளம் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
மோட்டோ பேட் 60 நியோ சிறப்பம்சங்கள் (Moto Pad 60 Neo Specifications):
- இதில், 11-இன்ச் 2.5கே டிஸ்பிளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், 2560 x 1600 பிக்சல்ஸ், 90 Hz refresh rate வசதி உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் கொண்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டு, ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு ஆதரவு உள்ளது.
- மேலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் உடன், கூடுதலாக மெமரி கார்டு ஸ்லாட் வசதி இந்த டேப்லெட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில், 7040mAh பேட்டரி உடன், 20W சார்ஜிங் சப்போர்ட், 68W இன் பாக்ஸ் சார்ஜர் உள்ளது.
- கேமராவை பொறுத்தவரை, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. மேலும், பல்வேறு கேமரா அம்சங்களும் டேப்லெட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
- டால்பி அட்மாஸ் வசதிகொண்ட நான்கு குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே, இதன்மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தை பெறலாம். மேலும், 3.5mm ஆடியோ ஜாக் வசதியும் உள்ளது.
- இதுதவிர, IP52 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)