Realme P2 Pro 5G: அசத்தலான அம்சங்களுடன் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!
இந்தியாவில் ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 14, சென்னை (Technology News): ரியல்மி (Realme) மொபைல் இந்தியாவில் அதன் P-சீரிஸை மேம்படுத்தியுள்ளது. அதன்படி, ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G Smartphone) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது Parrot Green மற்றும் Eagle Grey என இரண்டு வண்ணங்களில் உள்ளது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை:
- 8ஜிபி + 128ஜிபி - ரூ. 21,999
- 12ஜிபி + 256ஜிபி - ரூ. 24,999
- 12ஜிபி + 512ஜிபி - ரூ. 27,999.
- வெளியீட்டு சலுகையின்படி, அடிப்படை மாடலுக்கு ரூ. 2,000 மற்றும் மற்ற இரண்டில் ரூ. 3,000 தள்ளுபடி வழங்குகின்றது.
- ஸ்மார்ட்போனின், விற்பனை செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் (Flipkart), பிராண்டின் வலைதளம் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் தொடங்கும். Ford Motor Company: உலகின் டாப் மோட்டார் நிறுவனம் ஃபோர்டு.. தமிழ்நாட்டிற்கு மீண்டும் என்ட்ரி..!
சிறப்பம்சங்கள்:
- இதில், 6.7 இன்ச் சாம்சங் Curved AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 93.2% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 2000 நைட்ஸ் வரை உச்ச பிரகாசம், அதே நேரத்தில், கார்னிங் கொரில்லா 7i பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன், Qualcomm Snapdragon 7S Gen 2 5G சிப்செட்டைக் கொண்டுள்ளது. Adreno 710 GPU ஆனது கிராபிக்ஸ் ஃபோனில் நிறுவப்பட்டுள்ளது. 9-அடுக்கு குளிரூட்டும் முறையும் இதில் உள்ளது.
- ரியல்மி பி2 ப்ரோ ஸ்மார்ட்போனில், LED ஃபிளாஷ் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 50MP Sony LYT-600 முதன்மை கேமரா லென்ஸ், மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32MP முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
- இதில், 5200mAh பேட்டரி திறன் கொண்ட, 80W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. சுமார் 49 நிமிடங்களில் 0-100 சதவிகிதம் சார்ஜ் ஆகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 12 GB வரை LPDDR4x ரேம் மற்றும் 512 GB வரை UFS 3.1 உள் சேமிப்பு வசதியை பெறலாம்.
- ஸ்மார்ட்போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0-யில் வேலை செய்கிறது. மொபைலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் காரணமாக சந்தையில் இருக்கும் மற்ற சில போன்களுடன் போட்டி போடும். முக்கியமாக Motorola Edge 50 Fusion, Infinix GT 20 Pro, Redmi Note 13 Pro போன்ற மாடல்கள் இதில் அடங்கும்.