Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.!
இதனிடையே, இலட்சத்திற்கும் அதிகமான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 17, மாஸ்கோ (Technology News): உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவில், மார்ச் 15ம் தேதி முதல் எட்டாவது பிரதமருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்றோடு அங்கு பிரதமர் தேர்தல் (Russia President Election 2024) என்பது நிறைவுபெறுகிறது. முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது ரஷியாவில் முதல் முறையாக இணையவழியில் வாக்குகளை செலுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட வாக்காளர், தனது வாக்குகளை உரிய நடைமுறைப்படி இணையவழியில் செலுத்திக்கொள்ளலாம்.
இ-வோட்டிங்க்கு எதிராக சைபர் தாக்குதல்கள்: இந்நிலையில், ரஷியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் மீது பகிரங்க குற்றசாட்டை முன்வைத்து இருக்கிறது. ரஷியாவில் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வரும் எல்லா பம்பிலோவ் (Ella Pamfilov), "இ-வோட்டிங் முறையை கேள்விக்குறியாக்கும் வகையில் தற்போது வரை நாட்டில் 160000 அதிகமான சைபர் கிரைம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கான எதிர்வினையுடன் ரஷியா செயல்பட்டு அவற்றை முடக்கி இருக்கிறது. Living Together Girl Killed: உணவு பரிமாற மறுத்த 32 வயது பெண் கழுத்தை நெரித்துக்கொலை; லிவிங் டுகெதர் காதலன் வெறிச்செயல்.!
மே 07ம் தேதி அதிபர் பொறுப்பேற்பு: இதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சைபர் கிரைம் தாக்குதல்கள், ரிமோட் வோட்டிங் முறையை கண்காணிக்கும் பக்கங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதல் அனைத்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது" என தெரிவித்தார். முதல் தேர்தல் முடிவின்படி, வேட்பாளர்கள் இருவரும் பாதிக்கு மேல் வாக்குகளை பெறவில்லை என்றால் ஏப்ரல் 07ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து மே மாதம் 07ம் தேதி அங்கு அதிபராக வெற்றியாளர் பொறுப்பேற்பார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விபரம்: இத்தேர்தலில் புதிய மக்கள் கட்சியின் சார்பில் விளாடிஸ்லாவ் தவன்கோவ், சுயேச்சை வேட்பாளராக விளாடிமிர் புதின், லிபரல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.