Samsung Galaxy M34 5G: ரூ.16,999 விலையில் அமேசான் தளத்தில் வெளியானது சாம்சங் கேலக்சி M34 5G.. அசத்தல் சிறப்பம்சங்கள் இதோ..!
அதேபோல, 8GB + 128GB மாடல் ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜூலை 07, புதுடெல்லி (Technology News): சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி 34 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 MP அட்டகாசமான கேமராவுடன், புகைப்படம் எடுக்கும்போது ஆடினாலும் அது தெரியாத வகையில் போகஸ் செய்யும் சிறப்பம்சத்துடன் கேலக்சி 34 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6000 mAh பேட்டரி திறனுடன் 6GB + 128GB இடமளிக்கும் திறனுடன் சந்தையில் ரூ.16,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8GB + 128GB மாடல் ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் விற்பனை தலத்தில் இரவு வானின் நீலம், சில்வர், கடல்நீர் நீலம் ஆகிய நிறத்தில் செல்போன் விற்பனை செய்யப்படுகிறது. 120Hz Super AMOLED டிஸ்பிலே, 4 Generations OS அப்டேட், 5 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு Updates, 5G நெட்ஒர்க் அமைப்புடன் கேலக்சி 34 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Chennai Girl Suicide: ஆன்லைன் மோசடியில் ரூ.45 ஆயிரம் இழந்த 20 வயது சென்னை இளம்பெண் தற்கொலை; நைஜீரிய கும்பல் அட்டூழியம்.. உங்களுக்கும் அழைப்பு வருதா?.. உஷார்.!
சாம்சங்கில் M Series செல்போன்கள் சிறந்த தொழிநுட்பம் மற்றும் அமைப்புகளுடன் தொடர்ந்து பல புதுப்பிப்புகளுடன் வெளியாகி வருகிறது. இவை உபயோகம் செய்யவும் எளிதாக இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள செல்போனும் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 6000 mAh பேட்டரி திறன் இருப்பதால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை செல்போனை நாம் உபயோகம் செய்யலாம்.