Smart Door Locks: உங்க வீட்டுக்கு ஸ்மார்ட் பூட்டு வாங்க போறீங்களா? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க.!

ஸ்மார்ட் லாக்குகள் பாதுகாப்பை அளித்தாலும், சில முக்கிய குறைகளும் இருக்க தான் செய்கிறது.

Smart Door (Photo Credit: Pixabay)

அக்டோபர் 29, சென்னை (Technology News): தற்காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துமே நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. வீட்டில் டி.வி, வாஷிங் மிஷின், ஏசி, அனைத்தும் மின்னனு மயமாகிவிட்டது. இதில் பலரும் வீட்டில் பூட்டிற்கு பதில் ஸ்மார்ட் லாக்கை வைக்கின்றனர். மாடுலர் ஹோம் மட்டுமில்லாமல் சாதாரணமாக கட்டும் வீடுகளிலும் ஸ்மார்ட் லாக்களை அமைக்கின்றனர். மின் சாதனங்களை கண்ணை மூடிக் கொண்டு நம்பி விடுகிறோம். ஸ்மார்ட் லாக்குகள் பாதுகாப்பை அளித்தாலும், சில முக்கிய குறைகளும் இருக்க தான் செய்கிறது. மேலும் மின்னனு லாக்குகள் நாம் நினைக்கும் அளவிற்கு இது பாதுகாப்பானதா இல்லையா என நாம் உபயோக்கிக்கும் முறைகளை பொருத்து தான் அமைகிறது.

ஸ்மார்ட் லாக்கு (Smart Locks): ஸ்மார்ட் லாக்குகள் பல வகைகளில் வீடுகளில் பொருத்தப்படுகிறது. பாஸ்வேர்ட், விரல் ரேகைகள், கார்ட்கள், குரல், பதிவு போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் மேலும் மொபைலில் கனெட்க் செய்து வீட்டு உரிமையளார் என்பதை அதுவே டிடெக் செய்யும் விதத்திலும் வருகிறது. வீட்டிற்கு வருபவருடன் உரையாடியும் அதை ரெகார்ட் செய்யும் அளவிற்கு AI தொழில்நுட்பத்துடன் கூட ஹோம் ஸ்மார்ட் லாக்கர்கள் இருக்கின்றன. இருப்பினும் மின்னனு லாக்குகளில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. பாரம்பரிய சாவி போட்டு பூட்டும் பூட்டுகளை பயன்படுத்துபவருக்கு இந்த கவலைகள் தேவையில்லை. சாவி பூட்டுகளும் பல மாடனாக வருகின்றனர்.

சாதகம்: பாதுகாப்புகளுக்கு ஏற்ப பூட்டுகளும் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. மேலும் பூட்டுகள் ஸ்மார்ட் லாக்கை விட விலை மலிவாக கிடைக்கிறது. ஆனால் ஸ்மார்ட் லாக்குகள் வாங்குவதற்கும், பொருத்துவதற்கும் அதிகம் செலவாகிறது. அதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அனைத்து ஃபீச்சர்களும் இருக்குமாரு வாங்கினால் அதற்கு அதிக விலை தர வேண்டியிருக்கும்.ஏதாவது பிரச்சனையோ, பழுதோ ஏற்படும் போதும் சர்வீஸ் சார்ஜுகளும் தர வேண்டும். முற்றிலும் பழுதானால் புதிதாக ஃபிக்ஸ் செய்ய மீண்டும் இதே கதை. Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை‌‌.. ரூ.59 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

அனைத்து அறைகளுக்கு தனித்தனியாக பூட்டி எங்கு சென்றாலும் கொத்து சாவியை கையில் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றதெல்லாம் மாறி, அனைத்து அறைகளுக்கு ஸ்மார் லாக் போட்டு மொபைலில் கனெக்ட் செய்து கொண்டால் போதும் என்றாகிவிட்டது.

பாதகம்: ஒருவேளை மொபைல் போல் காணாமலோ தொலைந்தோ போனால் வீட்டிற்குள் செல்ல முடியாது. அதிக விலை கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் லாக்கை மாற்றவும் முடியாது. லாக் கனெக்டில் இருக்கும் திருடு போனை ஹேக் செய்து வீட்டினுள் எளிமையாக செல்ல முடியும். இண்டர்நெட்டுடன் கனெக்ட் செய்யப்படும் எந்த ஒரு சாதனமும் ஹேக் செய்ய முடியும். எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் மின் சாதனங்கள் சற்று சொதப்பாத்தான் செய்யும்.

இந்த ஸ்மார்ட் லாக்குகளை மின்சாதனம் பற்றி அறிந்து கொள்ளாதவர்களால் இயக்க முடியாது. வீட்டில் வயதானவர்களோ குழந்தைகளோ இருந்தால் ஸ்மார்ட் லாக்குகள் பயன்படுத்த கற்றுக் கொண்டாலும், கோளாறு ஏற்படுகையில் கடினம் தான். மேலும், கரெண்ட் அல்லது பேட்டரிகளில் இயங்கும் ஸ்மார்ட் லாக்குகள் எப்போது வேண்டுமானலும் அவைகளின் செயல்பாடுகளில் தடைகள் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாக்கும்.