BSNL 5G: அசத்தல் அறிவிப்பு.. 5ஜி சேவைக்கான சோதனை முயற்சிகளை தொடங்கியது பிஎஸ்என்எல்.!
தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த பிஎஸ்என்எல், தனது 5ஜி சேவைக்கான முதற்கட்ட செயல்முறைகளை தொடங்கி இருக்கிறது.
செப்டம்பர் 08, புதுடெல்லி (Technology News): கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாட்டில், பிஎஸ்என்எல்-ன் பாரத் 5ஜி சேவை தொடர்பான ஆராய்ச்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக பிஎஸ்என்எல் விரைவில் தனது 5 ஜி சேவையை அறிமுகம் செய்வதோடு மட்டுமல்லாமல், 6ஜி சேவைக்கான ஆராய்ச்சியிலும் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டது. Paralympics 2024: கோலாகலமாக இன்றுடன் நிறைவுபெறுகிறது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் அசத்தல் டூடுல்.!
5 ஜி சேவை விரைவில் தொடக்கம்:
அதன்படி, சமீபத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் பிஎஸ்என்எல் சார்பில் 4ஜி சேவைகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. விரைவில் 5ஜி சேவையும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சமூக வலைதளபக்கத்தில், பிஎஸ்என்எல் சார்பில் 5 ஜி தொழில்நுட்ப சேவைக்கான ஆய்வு நடந்து வருவது குறித்த காணொளி பகிரப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5 ஜி நெட்ஒர்க் சேவை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேட்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் 5ஜி சேவையை எதிர்நோக்கி பலகோடிக்கணக்கான பயனர்கள் காத்திருக்கின்றனர்.
பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான டெஸ்டிங் வீடியோ: