Credit Card Tips and Advice: கிரெடிட் கார்டு பயன்படுத்த நினைக்கிறீங்களா?? இந்த விசயமெல்லாம் முக்கியம்.. தெரிஞ்சுக்கோங்க பாஸ்.!
கிரெடிட் கார்டை எவ்வளவு பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): இன்றளவில் அவசர பணத்தேவை உட்பட பிற விசயங்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகள், வெகு சிலருக்கு தலைவலி தரும் விசயமாகவும் இருக்கிறது. பெரும்பாலானோரை பயமுறுத்தும் கிரெடிட் கார்டுகளை (Credit Card) சரியான முறையில் பயன்படுத்தினால் அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும். மேலும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும். கார்டை பயன்படுத்தும் விதத்திலேயே இதன் பயன்கள் அமைகிறது. இதில் பல சலுகைகள், ரிவார்டுகள், குறைந்த வட்டியில் கடன்கள், மலிவான காப்பீடுகளும் கிடைக்கிறது.
பயன்படுத்தும் முறைகள்:
- கிரெடிட் கார்டில் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் அட்டையை மட்டுமே பயன்படுத்தி வந்தால், மேலும் கோ பிராண்ட் கார்டுகளைக் கூடுதலாக பயன்படுத்தலாம். இதில் சலுகைகளும் வழங்கப்படும்.
பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் ரிவார்ட் புள்ளிகள் வழங்கப்படும். அதன் காலம் முடிவதற்குள் பயன்படுத்திவிட வேண்டும். இதனால் கணிசமான அளவுள்ள தொகையை சேமிக்கலாம்.
- தேவைகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வேறு கார்டை வாங்கிக் கொள்ளலாம். DDoS Attack Disrupted Musk-Trump Interview: எலான் மஸ்க்-டொனால்ட் டிரம்ப் நேர்காணல் நேரடி ஒளிபரப்பு.. தாமதமாக்கிய DDOS தாக்குதல்..!
- கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ரிவார்டுகள் பயனருக்கு பிடிக்கவில்லையெனில் அதை கேஷ் பேக்காகவும் மற்றிக் கொள்லும் வசதியும் உள்ளது.
- கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் ஆர்வத்தால் அதிக அளவிற்கு பொருட்களை வாங்கி விடுவார்கள். இதனால் அவருக்கான லிமிட்டையும் தாண்டிவிடுகிறார்கள். இதனாலேயே கடனிற்கு ஆளாகிறார்கள்.
- எப்போதும் கிரெடிட் கார்ட் வரம்பு மற்றும் கடன் நிலையையும் அடிக்கடி கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். கடன் நிலுவையை கருத்தில் கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டியவைகள்:
- கிரெடிட் கார்ட் மூலம் செய்யும் செலவுகளை கண்காணிக்க ஆன்லைன் வங்கியைப் படுத்த வேண்டும். லிமிட்டிற்குள் தான் செலவளிக்கிறோமா என்று பார்க்க வேண்டும்.
- சிபில் ஸ்கோர்கள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்கோர்கள், சரியான வருமானம் ஆவணங்கள் சமர்ப்பிப்பதாலும் கடன் வரம்பை அதிகரிக்க இயலும். மேலும் கடன்களும் குறைந்த வட்டிக்கும் வழங்கப்படுகிறது. CrowdStrike Accepts 'Most Epic Fail' Award: "மிகப்பெரிய தோல்வி" விருதினைப் பெற்ற க்ரௌட் ஸ்ட்ரைக்.. காரணம் என்ன?!
- கிரெடிட் கார்டில் முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும்.
ஜாயிண்ட் அக்கவுண்டாக ஓப்பன் செய்ய நினைத்தால், இதற்கு முன் நல்ல விதத்தில் கிரிடிட் கார்பயன்படுத்தியவரும் ஓப்பன் செய்யலாம்.
- கடன் வரம்பில் 30% க்கு மேல் அதிகரிக்காமல் அதற்குல் கடன்களைப் பெறலாம்.
குறிப்பு:
- கிரெடிட் கார்டை, தொலைபேசி எண்ணுடன் இணைத்து வைத்து பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வேண்டும்.
- கார்ட் காணாமல் போனால் உடனடியாக கிரெடிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும்.
- கிரெடிட் கார்டின் பாஸ்வேர்டை மறக்காதவாறும் எளிதில் கண்டு பிடிக்காதவாறும் அமைத்து வைக்க வேண்டும்.
- கிரெடிட் கார்ட் எண்களை, பாஸ்வேர்டை யாரிடம் தெரியப்படுத்தக்கூடாது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)