ஆகஸ்ட் 12, புதுடெல்லி (New Delhi): கணினி, மடிக்கணினி போன்ற சாதனங்களில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது பதிப்பு வரை வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளம், பலதரப்பிலும் தொழில்நுட்ப ரீதியாக வரவேற்பை பெற்று இருந்தது.
உலகளவில் செயலிழந்த ஓஎஸ் 11: இந்நிலையில், கடந்த மாதம் திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 பயன்படுத்துவோரின் இயங்குதளங்களை தாமாக பாதிக்கப்பட்டன. இந்த தடுமாற்றம் பெரும்பாலும் க்ரவுட் ஸ்ட்ரைக் (CrowdStrike) வழங்கிய அப்டேட்டால் ஏற்பட்டது. க்ரவுட் ஸ்ட்ரைக் என்பது ஒரு சைபர் செக்யூரிட்டி நிறுவனமாகும். இது மேம்பட்ட பாதுகாப்பை வழங்க விண்டோஸ் (Windows) உடன் ஒருங்கிணைக்கிறது. நிகழ்நேரத்தில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்க நிறுவனம் கிளவுட் அடிப்படையிலான ஏஐ உதவியுடன் பயன்படுத்துகிறது. Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!
மிகப்பெரிய தோல்வி: தகவல் தொழில்நுட்பத் துறையில் "சிறப்பு" மற்றும் "தோல்வி" செயல்திறன் கொண்ட நிறுவனங்களை அங்கீகரிக்கும் Pwnie விருது 2024 Def Con நிகழ்வின் போது நடைபெற்றது. அதில் உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பை ஏற்படுத்தியதற்காக க்ரௌட் ஸ்ட்ரைக் தலைவர் மைக்கேல் சென்டோனாஸ் நிறுவனத்தின் சார்பில் 'மிகப்பெரிய தோல்வி' ('Most Epic Fail' Award) விருதைப் பெற்றார்.
CrowdStrike accepting the @PwnieAwards for “most epic fail” at @defcon. Class act. pic.twitter.com/e7IgYosHAE— Dominic White 👾 (@singe) August 10, 2024