Cryptocurrency Scams: கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி; ஒரே ஆண்டில் ரூ.47000 கோடி இழந்த அமெரிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

கிரிப்டோகரன்சி தொடர்பான முதலீட்டு மோசடி திட்டங்களின் இழப்புகள் 2022 இல் $2.57 பில்லியனில் இருந்து 2023 இல் $3.96 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Cryptocurrency (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 12, சான் பிரான்சிஸ்கோ (Technology News): கிரிப்டோகரன்சி (Cryptocurrency) என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. பிட்காயின் என்பது அனைவருக்கும் தெரிந்த மற்றும் பேசும் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் கிரிப்டோகரன்சி ஆகும். அதுபோன்றே லைட்காயின், போல்கடோட் காயின், ஜெயின் லிங்க் காயின், டாஜ்காயின் போன்றவை உள்ளன.

கிரிப்டோகரன்சி மோசடி: இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் கிரிப்டோகரன்சி தொடர்பான முதலீட்டு மோசடி திட்டங்களின் இழப்புகள் 2022 இல் $2.57 பில்லியனில் இருந்து 2023 இல் $3.96 பில்லியனாக உயர்ந்துள்ளது. உலகளவில் 2022 உடன் ஒப்பிடும்போது, ​​டிஜிட்டல் கரன்சிகள் சம்பந்தப்பட்ட அல்லது முழுவதுமாக அடிப்படையிலான மோசடிகள் கடந்த ஆண்டு 45 சதவீதம் அதிகரித்துள்ளதை அந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதில் அமெரிக்காவில் அதிக புகார்கள் வந்துள்ளன. அதிலும் புளோரிடா, டெக்சாஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் அதிக புகார்கள் வந்துள்ளன. கடந்த ஒரே ஆண்டில் ரூ.47000 கோடி பணத்தை கிரிப்டோ மோசடியால் அமெரிக்கர்கள் இழந்துள்ளனர். Electric Shock From Refrigerator: திடீரென வெடித்து சிதறும் ஃபிரிட்ஜ்.. விபத்து ஏற்படாமல் தப்பிப்பது எப்படி?.. டிப்ஸ் இதோ..!

டிஜிட்டல் கரன்சியில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. டெலிகிராம் மற்றும் முகநூல் செயலியில் தொடர்பு கொண்டு, நீங்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு கிரிப்டோகரன்சி வாங்கினால், அந்த நாளின் முடிவில் அதன் மதிப்பு இரட்டிப்பாகும். அதனால் உங்களுக்கு ஒரு ரூபாய் என்பது அடுத்த ஒரே நாளில் நான்கு ரூபாயாக கிடைக்கும் என்பார்கள். அதிக லாபம் கிடைக்கும் என கவர்ச்சியான வாசகங்களை சொல்வதால் பலர் ஏமாறுகிறார்கள்.

குறிப்பு: கிரிப்டோ கரன்சி முதலீடு செய்பவர்கள் சூதாட்டத்தில் முதலீடு செய்வதற்கு சமமானது. இதில் அதிகமான ஆபத்து அதிகம் உள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது பங்கு சந்தையை போல கட்டுப்படுத்தப்பட முடியாதது. ஆன்லைன் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பண பரிமாற்றம் செய்யும் போது உங்களுக்கு தெரியாமல் தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்து விட கூடும் என்பதால் மிக கவனம் தேவை. பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.