Savings vs Current Account: சேவிங்ஸ் அக்கவுண்ட் VS கரண்ட் அக்கவுண்ட்.. வித்தியாசம் என்ன தெரியுமா?!
இந்த கட்டுரையில் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் கணக்குகளுக்கு இடையே நிலவும் குழப்பத்தை அவிழ்த்து, அதன் வித்தியாசங்களை உங்களுக்குச் சொல்கிறோம்.
செப்டம்பர் 23, சென்னை (Technology News): பொதுவாக, நமது பணத்தை சேமிக்க கரண்ட் அக்கவுண்ட் அல்லது சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்துவோம். இவை இரண்டும் நமது நிதி மேனேஜ்மெண்டுக்கு உதவியாக இருந்தாலும், அவற்றின் நோக்கம் வேறு. இந்த கட்டுரையில் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் கணக்குகளுக்கு இடையே நிலவும் குழப்பத்தை அவிழ்த்து, அதன் வித்தியாசங்களை உங்களுக்குச் சொல்கிறோம்.
சேமிப்பு கணக்கு (Savings Account):
சேமிப்பு கணக்கு என்பது தனி நபரோ அல்லது குறிப்பிட்ட நபர்களோ சேர்ந்து பணத்தை சேமிப்பதற்காக திறக்கும் வங்கிக் கணக்காகும். இதில் குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்து வைக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். இது மாத வருமானம் வருபவர்களுக்கு ஏற்றதாகும். மேலும் இந்த கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கைகுள் மட்டுமே பணபரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் இந்த கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு வங்கிகள் வட்டி வழங்கும். மேலும் இந்த கணக்கில் அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்திருந்தால் அது குறித்து வங்கிகள் கேள்வி எழுப்பவும், வருமான வரித்துறையிடம் தெரிவிப்பதற்கு உரிமை இருக்கிறது. Demat Account: பங்குச்சந்தையின் டிமேட் கணக்கு என்றால் என்ன? எப்படி ஓபன் செய்வது?!
நடப்பு கணக்கு (Current Account):
நடப்புக் கணக்கு என்பது வணிக நோக்கத்திற்காக, தொழில் முனைவோர், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் போன்றோர்கள் தொடங்கும் கணக்காகும். இதில் குறைந்தபட்ச தொகை சேவிங்ஸ் அக்கவுண்டை விட அதிகமாகவே இருக்கும். இந்த அக்கவுண்ட் இருக்கும் தொகைக்கு வட்டிகள் வழங்கப்படாது. இந்த கணக்கில் வரம்பற்ற பணப் பரிவத்தனைகளைச் செய்யலாம். வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் கரண்ட் அக்கவுண்ட் மூலம் டெபாசிட் மற்றும் பணம் எடுக்கவும் முடியும். கரண்ட் அக்கவுண்டை ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ போன்ற வங்கிகளில் திறக்கலாம். இந்த கணக்கு வைத்திருப்பவருக்கு வங்கி பல சேவைகளை வழங்குகிறது.