IPL Auction 2025 Live

Elon Musk's SpaceX Rocket: சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்.. எலன் மஸ்கின் அதிரடி சம்பவம்..!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Starship rocket (Photo Credit: @elonmusk X)

மார்ச் 15, டெக்சாஸ் (Texas): உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) விண்வெளி நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” (Starship rocket ) எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் 394 அடி உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. Honor Pad 9 India Launch Confirmed: இந்தியாவுக்கு வரும் ஹானர் பேட் 9 டேப்லெட்.. சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

இந்த ராக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஏற்கனவே இரு முறை முயற்சி தோல்வியைடைந்ததால் மூன்றாவது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் 3-ம் கட்ட சோதனையின்போது முன்பை விட வேகமாக விண்ணுக்கு வெற்றிகரமாக பாய்ந்தாலும், திரும்பும்போது தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.