Fixed and Variable Rate Loans: நிலையான vs மாறுபடும் வட்டி.. வீட்டு கடன் வாங்க சிறந்தது எது?
பொதுவாகவே வீட்டுக் கடனிற்கு அளிக்கும் வட்டி விகிதம் நிலையான மற்றும் மாறுபடும் வட்டி என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
அக்டோபர் 25, டெல்லி (Finance Tips): வட்டிக்கடன் வாங்குகையில் வட்டி எவ்வளவு உள்ளது என்பது அதிகம் கவனம் செலுத்தும் நாம் அந்த கடனிற்கான கால நாட்கள் எவ்வளவு என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். இதனால் வட்டி கட்டுவதில் கணிசமான தொகையை இழந்து விடுகிறோம். குறிப்பாக வீடு கட்டுவத்ற்கு அதிகளில் கடன்களை பெறுகிறோம். நீண்ட காலத்திற்கு அதை மட்டுமே கட்டி வருகிறோம். வீட்டுகடன்களை வாங்கும் போதே தெளிவாக சிந்தித்து தேர்ந்தெடுத்து கடன் பெறலாம். பொதுவாகவே வீட்டுக் கடனிற்கு அளிக்கும் வட்டி விகிதம் நிலையான மற்றும் மாறுபடும் வட்டி என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
நிலையான வட்டி விகிதம்:
இந்த நிலையான வட்டி என்பது, வாங்கும் கடன் தொகைக்கான ஒரு நிலையான வட்டியை குறிப்பிட்ட காலத்திற்கு மாத தவணையாக செலுத்துவதாகும். இதில் வட்டி விகிதம் ஏறினாலும் இறங்கினாலும், கடனிற்கு செலுத்தும் தொகையில் மாறுபாடு ஏற்படாது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே தொயையைத் தான் அளிக்க வேண்டும். நிலையான வட்டி விகிதத்தில் கடன் பெறும் போது நிதி சிக்கல் ஏற்படாமால் நிலையான தொகையை தொடர்ச்சியாக செலுத்தி கடனை சுலபமாக அடைத்து விடலாம். மேலும் நாம் செலுத்தும் தொகையை முன்கூட்டியே கணக்கிட்டு எவ்வளவு தொகை தேவைப்படும் என பட்ஜெட் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒரு வேலை வட்டி விகிதம் குறைந்திருந்தால் அந்த பலன் கிடைக்காது. நிலையான வட்டியில் கடன் பெற விரும்பினால் அந்த வட்டித் தொகை மாத சம்பளத்தில் 30 சதவீதத்திற்குள் இருந்தும், கடன் செலுத்தும் காலம் குறைவாக இருந்தாலும் இம்முறைக் கடனை தாராளமாக வாங்கலாம். இது பாதுகாப்பனதாக இருக்கும். Svalbard Global Seed Vault: ஆர்டிக்-கில் பாதுகாக்கப்படும் பாரம்பரிய விதைகள்; காரணம் என்ன? அசரவைக்கும் தகவல் இதோ.!
மாறுபடும் வட்டி:
மாறுபடும் வட்டி என்பது வாங்கும் கடனுக்கான வட்டி, பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். இந்த வட்டி விகிதம், எம்.சி.எல்.ஆர். எனப்படும் கடன் திட்டங்களின் அடிப்படையில் மாறும். இதனடிப்படையில் வருங்காலத்தில் வட்டி விகிதம் அதிகமானால் வட்டிக்கான தொகையும் அதிக அளிக்க வேண்டி வரும். ஆனால் எதிர்காலத்தில் மாறும் வட்டி விகிதங்களை முன்கூட்டியே கணிக்க முடியாது. மேலும் சில வங்கிகள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம். இதில் சாதகமும் இருக்கும், பாதகமும் இருக்கும். கடன் வாங்கும் போதே நிபந்தனைகளை சரியாக கவனிக்க வேண்டும்.
மாறுபடும் வட்டி விகிதம் பொதுவாக நிலையான வட்டி விகிதத்தைக் காட்டிலும் 1 முதல் 2.5 % குறைவாகவே இருக்கும். இந்த முறையை தேர்வு செய்வதால் வட்டி விகித ஏற்றத் தாழ்வுகேற்ப வட்டியை செலுத்துவதால் விரைவிலேயே கடனை செலுத்திவிட முடியும். ஆனால் வட்டிகான தொகையை முன்கூட்டியே அறிந்து பட்ஜெட் போட்டு திட்டமிட முடியாது. இதற்கான தொகை தொரட்டுஅவ்து சற்று சவாலாக அமைந்துவிடும். பிற கடன்களோ அல்லது இஎம்ஐ-களோ இல்லாதாட்சத்தில் இதை தேர்வு செய்யலாம். ஆனால் எதிர்பார செலவுகள் வந்தால் சமாளிக்கும் திறன் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என்பதை மட்டும் நம்பி வாங்க வேண்டாம். இருந்தாலும் இதில் சற்று பண ஆதாயம் கிடைக்கும்.
குறிப்பு: எந்த வட்டி முறையில் கடன் வாங்கினால் அதன் வட்டி விகிதங்களைக் கணக்கிட்டு தேர்வு செய்ய வேண்டும். மேலும் நிலையான வட்டி விகிதத்திலிருந்து மாறுபடும் வட்டி விகித முறைக்கு எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெற வங்கி நிறுவனங்கள், அதற்கு கட்டணங்கள் வசூலிக்கலாம். இதையும் கவனித்து வட்டி விகிதத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.