நவம்பர் 27, சென்னை (Chennai News): பொருளாதார தேவைகள் உருவாகும் போது, பலரும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்த நிலைமையைப் பயன்படுத்தி சில மோசடிக்குழுக்கள் குறைவான வட்டி, சிறப்பு தள்ளுபடி, உடனடி கடன் அங்கீகாரம் போன்ற நம்ப முடியாத சலுகைகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உண்மைக்கு எட்டாத சலுகைகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்பணம் கேட்டால் கவனம்:
வழக்கமாக வங்கிகள் செயலாக்க கட்டணத்தை (Processing Fee) கடன் தொகை வழங்கும் பின்னர் மட்டுமே பிடித்தம் செய்யும். எனினும், பணம் கணக்கில் வரும்முன் கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்தும் அழைப்புகளுக்கு பதிலளிப்பது அபாயகரமானது. இது மோசடி முயற்சியாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், வங்கியின் அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்புவது மிக முக்கியம். Apple Layoffs: ஆப்பிள் நிறுவனம் அதிரடி பணி நீக்கம்.. விற்பனை பிரிவு ஊழியர்கள் பாதிப்பு.!
RBI அங்கீகாரம்:
தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கு முன், அவை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். RBI-யின் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடும் அபாயம் அதிகம். அதனால், அரசு அங்கீகாரமில்லா நிறுவனங்களிடம் இருந்து எந்த வகையிலும் கடன் பெறக்கூடாது என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தனிப்பட்ட தகவல்:
PAN, Aadhaar, மொபைல் OTP, வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை கேட்டு பலரும் சதி செய்கின்றனர். இத்தகைய தகவல்களை பகிர்வதால் கணக்கு மோசடி, போலி கடன், அடையாள திருட்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வங்கியின் அதிகாரப்பூர்வ தொடர்புகளைத் தவிர யாருடனும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.