அக்டோபர் 24, நார்வே (Technology News): ஸ்வால்பார்டு உலக விதை வங்கி 2008-ம் ஆண்டில் ஆர்டிக் பிரதேசத்தின் ஒரு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டது. இந்த விதை வங்கியின் முக்கிய பணியே உலகில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பயிர்களின் விதைகளை சேகரித்து வைப்பதாகும். இதன் மூலம் பயிர்களின் மரபணுக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். 1920 ஆம் ஆண்டு, சுவல்பார்டு தீவுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் "சுவல்பார்டு ஒப்பந்தம்" கையெழுத்தானது. இதன்படி, நார்வே தீவுகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டை பெற்றது, ஆனால் பிற நாடுகளும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
விதைகளின் பாதுகாப்பு: இரண்டாம் உலகப்போரானது உலகம் மக்களுக்கு பூமியின் நிலையை பற்றி எடுத்துரைத்தது. அதாவது அணு ஆயுதங்களினால் ஒரு நகரத்தினை அழிக்க முடியும், அங்குள்ள சிறு பொருட்கள் கூட இல்லாமல் அழிக்க முடியும் என்பதனை மக்களுக்கு உணர்த்தியது. அணு ஆயுதங்கள் மட்டுமல்லாமல், இயற்கை பேரழிவுகள், உயிர் கொல்லும் நோய்கள், பசி என பலவற்றின் மூலம் இந்த உலகம் அழியலாம் என்பதனை மக்களுக்கு புரிய வைத்தது. அது மட்டும் இல்லாமல் உலக அளவில் பல அணு ஆலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். எப்போது வேண்டுமானாலும் மனித இனம் அழியலாம். மனித இனம் அதன் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. IND SMART App: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே.. பழைய செயலி விரைவில் முடக்கம்.. புதிய செயலியை டவுன்லோட் பண்ணிடீங்களா?.. விபரம் உள்ளே.!
இந்த நிலையில் மக்களுடைய உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டால் என்னவாகும்? உணவுப் பயிர்கள் முற்றிலும் அழிந்து போனால் உலக மக்களின் நிலை என்னவாகும்? இப்படியான நிலை ஏற்பட்டால் அதிலிருந்து மீள உணவுப் பயிர்களை பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த ஆர்டிக் விதை வங்கி. இதில் லட்சக்கணக்கான உணவுப் பயிர் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஆர்டிக் விதை வங்கி (Artic Seed Bank): இந்த உலகமே அழிந்தாலும் இந்த விதை வாங்கி அழியாத அளவிற்கு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்புக்காகவே, டூம்ஸ் டே வால்ட் (Doomsday vault) என்று அழைக்கப்படுகின்றது. டூம்ஸ் டே வால்ட், நார்வேவுக்கும் வட துருவத்துக்கும் நடுவிலுள்ள ஸ்பிட்ஸ்பெர்கென் என்ற தீவிலுள்ள ஸ்வால்பார்டு மலைக்கு அருகில் அமைந்துள்ளது. விதைகள், கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் (430 அடி) உயரத்தில், permafrost எனப்படும் பனி உறைந்த நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகின்றன. வெப்பநிலை -18°C (-0.4°F) க்கு கீழ் பராமரிக்கப்படுகிறது. எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும், விதைகளை பாதுகாக்க புற ஜெனரேட்டர்கள் மற்றும் குளிர்விப்பு அமைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதைகள், காற்று புகாத மூடியுறைப்பைகளில் வைக்கப்பட்டுள்ளன. விதைகளை பராமரிப்பதற்காக ஒரு சில நாட்கள் மட்டுமே இது திறந்து வைக்கப்படும். மற்ற நாட்களில் மூடியே தான் இருக்கும். உலகில் உள்ள பல நாடுகள் இந்த விதை வங்கிக்கு விதைகளை வழங்குவதுண்டு. புதுவகையான பயிர்களை உருவாக்குவதற்காக, இருக்கின்ற பயிர்களை மேம்படுத்துவதற்காக, பல்வேறு தாவர வகைகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. Wash Towels: உங்கள் துண்டை கடைசியா எப்போ துவைச்சிங்க? இந்த விஷயத்தெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
உலகளவில், 7000 வகையான தாவரங்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் நம்முடைய உணவில் 60% கலோரிகளை வழங்கக்கூடிய சோளம், அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பயிரிடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு கணக்குப்படி, 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விதைகள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. ஸ்வல்பார்டு உலக விதை வங்கியில் சுமார் 1 மில்லியன் விதை மாதிரிகள் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்வால்பார்டு விதை வங்கி மின்சாரத் தொடர்பை இழந்தாலும்கூட, விதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மிகவும் குளிர்ச்சியான ஆர்டிக் பிரதேசத்தில் அது அமைக்கப்பட்டுள்ளது.