Ford Motor Company: உலகின் டாப் மோட்டார் நிறுவனம் ஃபோர்டு.. தமிழ்நாட்டிற்கு மீண்டும் என்ட்ரி..!
ஃபோர்டு மோட்டார் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு கார் நிறுவனங்கள் நுழைந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில நிறுவனங்கள் இந்திய மக்களை கவர முடியாமல் வெளியேறியும் உள்ளன. அவ்வாறான நிறுவனங்களில் ஒன்றுதான் ஃபோர்டு (Ford) கார் நிறுவனம் ஆகும். இதுவொரு அமெரிக்க கார் நிறுவனம் ஆகும்.
இந்தியாவிலிருந்து வெளியேறிய ஃபோர்டு: இந்தியாவில் ஒரு சில ஃபோர்டு கார்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இன்னும் சொல்லப்போனால், ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் காரின் விற்பனை ஆனது 2021ஆம் ஆண்டில் ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில் கூட சிறப்பாக விற்பனையாகி கொண்டு இருந்தது. இருப்பினும், வேறு சில காரணங்களுக்காக, வேறு வழியின்றி ஈக்கோஸ்போர்டின் விற்பனையை ஃபோர்டு நிறுத்தி, இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. Cryptocurrency Scams: கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி; ஒரே ஆண்டில் ரூ.47000 கோடி இழந்த அமெரிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்: இதற்கிடையே தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 10–ந் தேதி அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவில், "தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 30 ஆண்டுகளாக தமிழகத்தில் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது" எனப் பதிவிட்டுள்ளார். Vivo T3 Ultra 5G: புதிய விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
தமிழ்நாட்டிற்கு மீண்டும் என்ட்ரி: இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் (TN CM MK Stalin) கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகி ஹே ஹார்ட் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி கோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கினால் தமிழ்நாட்டில் சுமார் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.