செப்டம்பர் 13, சென்னை (Technology News): இந்தியாவில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் (Vivo T3 Ultra 5G Smartphone) நேற்று (செப்டம்பர் 12)அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏற்கனவே வெளியான Vivo T3, Vivo T3X, Vivo T3 Lite மற்றும் Vivo T3 Pro ஆகியவற்றுக்குப் பிறகு இந்தத் தொடரின் ஐந்தாவது புதிய ஸ்மார்ட்போன் இதுவாகும். இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் (Smartphone Features) பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
விலை:
- 8ஜிபி + 128ஜிபி - ரூ. 31,999
- 8ஜிபி + 256ஜிபி - ரூ. 33,999
- 12ஜிபி + 256ஜிபி - ரூ. 35,999
- இதன் முதல் விற்பனை வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி மாலை 7 மணிக்கு Flipkart மற்றும் Vivo-யின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் தொடங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்போனை லூனார் கிரே மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் பெறலாம்.
சிறப்பம்சங்கள்:
- இதில், 6.78-இன்ச் 1.5K 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம், 4,500 nits உச்ச பிரகாசம் மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் Mediatek Dimensity 9200+ SoC மூலம் இயங்குகிறது. மென்பொருளில், Android 14-யை அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 இயக்குகிறது.
- புதிய விவோ ஃபோன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
- இதில், OIS உடன் 50MP Sony IMX921 முதன்மை சென்சார் மற்றும் பின்புறத்தில் 8MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்பி எடுக்க 50MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், AI புகைப்பட மேம்பாட்டிற்கான 'Aura Light’ உள்ளது.
- Vivo T3 அல்ட்ராவில், 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன், 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.