Microsoft Windows Crash News: விண்டோவ்ஸ் 11 ஓஎஸ் செயலிழப்பு; உலகளவில் பயனர்கள் அவதி.!

தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களின் வாழ்நாட்களில் குடும்ப உறுப்பினர் போல கவனித்து வந்த சிஸ்டமில், ஓஎஸ் திடீரென செயலிழந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Windows 11 Crash (Photo Credit: @GovtGlimpse X)

ஜூலை 19, புதுடெல்லி (New Delhi): கணினி, மடிக்கணினி போன்ற சாதனங்களில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஓஎஸ் பிரதான இயங்குதளமாக செயல்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி-யில் தொடங்கி தற்போது விண்டோஸ் 11 வது பதிப்பு வரை வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்களுடன் அட்டகாசமாக இயங்கும் விண்டோஸ் 11 இயங்குதளம், பலதரப்பிலும் தொழில்நுட்ப ரீதியாக வரவேற்பை பெற்று இருந்தது. Bajaj Freedom 125 CNG Bike Bookings Open: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. வாங்கிய முதல் கஸ்டமர்..!

உலகளவில் செயலிழந்த ஓஎஸ் 11:

இந்நிலையில், இன்று திடீரென விண்டோஸ் (Windows OS 11 Crashed) ஓஎஸ் 11 பயன்படுத்துவோரின் இயங்குதளங்களை தாமாக பாதிக்கப்பட்டுள்ளன. நீல நிற திரையுடன், உங்களின் சாதனம் சிக்கலில் சிக்கியதாக கூறி தகவல் பகிரப்பட்டு ஓஎஸ் முடங்கி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பயனர்கள், அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் விண்டோஸ் 11 ஓஎஸ் செயலிழந்ததை தெரிவித்து வருகின்றனர்.

இந்த செயலிழப்புக்கான காரணம் என்பது தெரியவில்லை. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப குழு, இந்த பிரச்சனையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

விண்டோஸ் 11 செயலிழந்ததாக குற்றச்சாட்டு:

பயனர்கள் அவதி:

செய்தியை வழங்கும் நிறுவனங்களின் நிலைமையை பங்கம் செய்த பயனர்:

சிறப்பான வார இறுதி விடுமுறைக்கு ஏற்பாடு செய்துகொடுத்த விண்டோஸ்: