Mark Zuckerberg: பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க அரசு: காரணம் என்ன?.. மார்க் பகீர் பதிவு.!

உலகளவில் பரவிய கொரோனா வைரஸ் குறித்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவனத்திற்கு கொரோனா பதிவுகளை நீக்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Donald Trump | Mark Zuckerberg | Joe Biden (Photo Credit: @BRICSinfo / @creepydotorg / @JoeBidenphoto X)

ஆகஸ்ட் 27, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், மென்லோ பார்க்கில் செயல்பட்டு வரும் மெட்டா நிறுவனம், சர்வதேச அளவில் பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகிய செயலிகள் சேவையை வழங்கி வருகிறது. நாளொன்றுக்கு மெட்டா நிறுவனத்தின் செயலிகளை பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது, பேஸ்புக்-கில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால் மக்களிடையே அச்ச உணர்வும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தரப்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் தரப்பட்டது. சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் பதிவுகளை நீக்கக்கோரி கோரிக்கை வைத்த நிலையில், ஒருகட்டத்தில் கோரிக்கை அழுத்தமாக மாறியது. இதனால் மொத்தமாக 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரவல் குறித்த பதிவுகள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இந்த விஷயம் குறித்து தற்போது மெட்டா நிறுவனம் சார்பில் மார்க் ஸுக்கர்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். T7 Heavy Duty Tractor: மாட்டு சாணத்தில் இயங்கும் டி7 டிராக்டர்.. சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?!

அரசின் செயல்பாடுகள் காரணமாக தாங்கள் வருந்துவதாக மார்க் அறிவிப்பு:

அந்த அறிக்கையில், "கொரோனா பரவலின்போது பதிவு செய்யப்பட்ட பயனர்களின் இடுகைகளை, அமெரிக்க அரசு கொடுத்த அழுத்தத்தால் நீக்கினோம். இது வருத்தத்தை தருகிறது. சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்கள் உட்பட பிற உள்ளடக்கத்தை கண்காணிக்க உலகளாவிய விவாதம் அதிகரித்து வருகிறது. அன்று அழுத்தம் கொடுக்கப்பட்டதற்கு நாங்கள் வருத்தத்தை அடைந்தோம். கொரோனா பரவல் குறித்த பதிவுகளை நீக்க பலமுறை எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த விஷயம் குறித்த தகவலை யாரும் அதிகம் பேசவில்லை. இதனால் நாங்கள் வருந்துகிறோம்" என கூறி இருக்கிறார். அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய அதிபர் ஜோ பைடன், தனது முடிவில் இருந்து பின்வாங்கியதை தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபருக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் ரீதியாக தொழிலதிபர்களும் தங்களின் தரப்பு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் ஜோ பைடன் நிர்வாகத்திடம் இருந்து தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக மார்க் கூறியுள்ளார்.

பேஸ்புக் சிஇஓ தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கை: