IPL Auction 2025 Live

Laser Message to NASA: பூமியுடன் தொடர்புகொள்ளும் வேற்றுகிரகவாசிகள்? 140 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து வந்த லேசர் செய்தி - நாசா அறிவிப்பு.!

பூமிக்கும் - சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவில், 1.5 பங்கு தூரம் கொண்ட இடத்தில் மையம் கொண்டுள்ள தனது விண்கலத்தை வைத்து நாசா செய்தியை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

Nasa Receives Laser Signal (Photo Credit: @TheInsiderPaper)

ஏப்ரல் 30, வாஷிங்க்டன் டிசி (Technology News): விண்வெளி பயணம், பிற கிரகங்களில் உள்ள சூழ்நிலை தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா (NASA Space Research), தொடர்ந்து பால்வழி அண்டத்தை கடந்த பயணத்திற்கும், அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 140 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் தனது சைக்கி விண்கலத்தில் இருந்து நாசா லேசர் செய்திகளை பெற்று இருக்கிறது. இது எதிர்காலத்தில் செவ்வாய்க்கு பயணத்தை மேற்கொள்ள களத்தினை அமைத்து கொடுத்துள்ளது.

லேசர் செய்தியை பெற்ற நாசா: நாசா கடந்த 2023ம் ஆண்டு விண்ணல் செலுத்திய சைக்கி விண்கலம் (Psyche Spacecraft) தொடர்ந்து தனது பயணத்தை கோள்களை கடந்து செயல்படுத்தி வருகிறது. பல மில்லியன் மைல் தொலைவில் இருந்து நாசா பெற்றுள்ள லேசர் செய்தி, எதிர்காலத்தில் சமிக்கைகளை விரைந்து பெற உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சைகை விண்கலம் பூமிக்கும் - சூரியனிற்கும் இடையேயான தூரத்தில், 1.5 மடங்கு அதிக தொலைவில் உள்ளது. HBD Rohit Sharma: 37 வயதில் அடியெடுத்து வைத்த ஹிட்மேன்; பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்தும் ரசிகர்கள்.! 

எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைக்கு முதற்படி: லேசர் தகவல் தொடர்புகளை, விண்வெளியில் இருந்து நீண்ட தூரத்திற்கு அனுப்பி தகவலை பெறலாம் என்பதை சோதனை செய்து உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த நாசா, தற்போது அதன் முயற்சியில் வெற்றியையும் அடைந்துள்ளது. முந்தைய அலைவரிசைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, தற்போதைய அலைவரிசை பயன்பாடு 10 மடங்கு முதல் 100 மடங்கு வரை வேகமானது ஆகும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கும்.

10 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்த நாசா: சைக்கி விண்கலம் அனுப்பிய தரவுகளை நாசா 10 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து தற்போது சாதனை படைத்துள்ளது. 2023 டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்ட சைக்கி, 19 மில்லியன் மைல் தொலைவில் இருந்தபோது தனது முதல் சோதனையில் வினாடிக்கு 267 மெகாபிட் வேகத்தில் அனுப்பி வைத்தது. தற்போது 140 மில்லியன் மைல் தொலைவுக்கு சென்றுள்ள காரணத்தால், அதன்வேகம் என்பது குறைந்து இருக்கிறது.