PAN 2.0: பழைய பான் கார்டு இனி தேவைதானா? PAN 2.0 திட்டம் என்றால் என்ன? அப்ளை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!

மத்திய அரசு இப்போது பான் 2.o என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

PAN (Photo Credit: LatestLY)

டிசம்பர் 02, டெல்லி (Technology News): பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நவ. 25ம் தேதி பான்2.0 (PAN 2.0) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ₹1,435 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. PAN 2.0 என்பது நிரந்தர கணக்கு எண் (PAN) அமைப்பின் முக்கியமான அப்கிரேட் ஆகும். வரி செலுத்துவோருக்கு எல்லா விஷயங்களிலும் தடையற்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதில் இடம்பெற உள்ள மிக முக்கிய வசதி என்றால் அது பான் க்யூஆர் கோட்கள் (QR code) தான். வரி செலுத்துவோர் விவரங்களை விரைவாக அணுகவும் சரிபார்க்கவும் இது உதவும். தற்போதுள்ள பான் கார்டுதாரர்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் QR கோடு சேர்த்து இலவசமாக வழங்கப்படும். Bikini Marriage: பிகினி உடையில் மணக்கோலத்தில் திருமணம் செய்த இளம்பெண்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்.!

NRIகள் படிவம் எண் 49A-ஐ சமர்ப்பித்து, தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன் UTIITSL அல்லது Protean ( என்எஸ்டிஎல் இ-கவ்) ஆகியவற்றின் பான் விண்ணப்ப மையத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது ஐயூஐடிஎஸ்எல் அல்லது புரோட்டியன் (முன்னாள் என்எஸ்டிஎல் இ-கவ்) இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கப்பட்ட PAN 2.0 அமைப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதற்கான விண்ணப்பிக்கும் முறை, காலக்கெடு ஆகியவை குறித்த விவரங்கள் இன்னும் வருமான வரித்துறையால் அறிவிக்கப்படவில்லை.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif