Realme Techlife Studio H1: ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 ஹெட்போன்.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மாடலான ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
அக்டோபர் 15, டெல்லி (Technology News): ரியல்மி (Realme) நிறுவனம் இன்று இந்தியாவில் அதன் புதிய ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ஸ்மார்ட்போன் சாதனத்துடன், வயர்லெஸ் ஹெட்போன்ஸ் மாடலான ரியல்மி டெக்லைஃப் ஸ்டூடியோ எச்1 (realem TechLife Studio H1) என்ற ஹெட்ஃபோன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தில் நிறுவனம் பல அட்டகாசமான அம்சங்களை பேக் செய்துள்ளது. ரியல்மி நிறுவனம் அதன் முதல் வயர்லெஸ் ஹெட்போன்ஸ் சாதனமாக இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. SpaceX Starship: பூமிக்கு வந்த ராக்கெட்டை ‘கேட்ச்’ பிடித்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம்.. வைரலாகும் வீடியோ.!
சிறப்பம்சங்கள்: இந்த புதிய ஹெட்போன்ஸ் சாதனம் 40mm மெகா டைனமிக் பாஸ் டிரைவர் ஆதரவுடன் எல்டிஏசி ஆடியோ கோடக் (LDAC Audio Codec) அம்சத்தை கொஇது 43dB ஹைபிரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Noise Cancellation) உடன் மூன்று லெவல் ஸ்மார்ட் ஏஎன்சி (3 Level Smart ANC), ஸ்பேசில் ஆடியோ எபக்ட் (Spatial audio effect), 80ms அல்ட்ரா லோ - லேடன்சி ஆதரவு (80ms ultra-low latency) போன்ற ஆதரவுகளை ரியல்மி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சாதனம் 600mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் சார்ஜிங் நேரம் 1.5 மணிநேரமாகும். இந்த சாதனம் ரூ.4999 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.