SpaceX Starship: பூமிக்கு வந்த ராக்கெட்டை ‘கேட்ச்’ பிடித்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம்.. வைரலாகும் வீடியோ.!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
அக்டோபர் 14, வாஷிங்டன் (World News): உலக நாடுகள் அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை சோதித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக செயற்கைக்கோள்களை அனுப்பும் முயற்சியில் போட்டிப்போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற நிறுவனமும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!
அந்த வகையில் அந்நிறுவனம் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை, தனது ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இரண்டரை நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், அதிலிருந்து தனியாக பிரிந்தது. பின்னர் 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்புவியீர்ப்பு விசையை எதிர்த்து டெக்சாஸ் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது. அதனை ’மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது ‘சாப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளால் கேட்ச் செய்ததை உலகமே வியந்து பார்த்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பூமிக்கு வந்த ராக்கெட்டை ‘கேட்ச்’ பிடித்த ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளம்: