SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.!

இந்தியாவின் 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.

SSGN (Photo Credit; @vatsalyatandon X)

அக்டோபர் 22, டெல்லி (Technology News): இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் (Nuclear Submarine) உள்ளன. இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. ஐஎன்எஸ் அரிஹன்ட் என்ற நீர்மூழ்கி கப்பல் மட்டும் அணு சக்தியில் இயங்க கூடியது. இது அணு ஏவுகணைகளை ஏவும் திறனுடையது. இவை எஸ்எஸ்பிஎன் என அழைக்கப்படுகிறது. Gold Silver Price: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!

இந்நிலையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் நான்காவது மற்றும் சமீபத்திய அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் (SBC) கடந்த அக்டோபர் 16-ம் தேதி அறிமுகப்படுத்தினார். இந்த 4வது நீர்மூழ்கிக் கப்பலில் குறிப்பிடத்தக்க வகையில் 75% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. தற்போது S4* என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 4வது நீர்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படை இன்று இயக்கிப் பார்த்து சோதனை செய்தது.

இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: