TV Screen Cleaning Tips: டிவி ஸ்க்ரீனை துடைக்கப் போறீங்களா? அப்போ இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!
டிவி திரையை சுத்தம் செய்யும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
ஆகஸ்ட் 28, சென்னை (Technology News): டிவி திரையை சரியான முறையில் சுத்தம் செய்யாத பட்சத்தில் அதில் கீறல்கள் விழுவதற்கும், திரையில் வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிவிடும். எனவே, திரைக்கு எந்த பாதகமும் ஏற்படாமல் டிவியை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
துடைக்கும் முறைகள்:
- டிவி ஸ்க்ரீன் ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும். அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே டிஷூ மற்றும் டவல்களில் துடைக்கும் போது அவைகள், உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தலாம். எனவே மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தவும்.
- டிவி ஸ்க்ரீன்கள் உடையக்கூடியவை ஆகும். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்தவரை மெதுவாக துடைப்பதை உறுதி செய்யவும். X Twitter Down: திடீரென முடங்கிய எக்ஸ் தளம்.. பயனாளர்கள் தவிப்பு..!
- எந்தவொரு க்ளீனிங் சொல்யூஷனையும் நேரடியாக உங்கள் டிவி ஸ்க்ரீனில் தெளிக்காதீர்கள். எப்பொழுதும் பஞ்சு இல்லாத துணி அல்லது மைக்ரோஃபைபர் மீது க்ளீனிங் சொல்யூஷனை வைத்து, பின்னர் அதை ஸ்க்ரீனில் வைத்து மெதுவாக துடைக்கவும்.
- தண்ணீர் போன்ற திரவங்களை பயன்படுத்தி உங்கள் டிவியை சுத்தம் செய்தால் அது டிவியின் உள் பகுதிகளை சேதப்படுத்தலாம். எனவே அவற்றினை பயன்படுத்தவே கூடாது. அவைகள் டிவி ஸ்க்ரீனில் உள்ள ஆன்டி-க்ளேர் கோட்டிங்கை (Anti-glare coating) சேதப்படுத்தலாம்.
- சுத்தம் செய்யும் போது உங்கள் டிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
- டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரு திசையில் இருந்து (செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக) துடைக்க வேண்டும், பின்னர் அதை எதிர் திசையில் இருந்து செய்ய வேண்டும்.
- சிலமுறை பயன்பாட்டிற்கு பிறகு, டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் துணியை மாற்றுவது நல்லது. ஏனெனில் அதில் தூசிகள் தங்கி விடலாம், அது ஸ்க்ரீன்களில் கோடுகளை, கீறல்களை ஏற்படுத்தலாம்.
- டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்து முடித்ததும், அதன் ஸ்க்ரீன் முழுமையாக உலர வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஈரமான புள்ளிகள் ஸ்க்ரீனில் அப்பட்டமாக தெரியும், பின்னர் அதுவே கூட ஓரு கறையாக மாறிவிடலாம்.