X Logo (Photo Credit: Freepik)

ஆகஸ்ட் 28, கலிபோர்னியா (Technology News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். இருப்பினும் பயனர்களின் எண்ணிக்கையானது அதில் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது. அதுமட்டுமின்றி வெரிஃபைடு பயனாளிகளுக்கு வருமானத்தின் சில பகுதிகளை பகிர்ந்து கொடுகின்றார். இதனால் பல பயனாளர்கள் எக்ஸ தளத்தின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். Mark Zuckerberg: பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க அரசு: காரணம் என்ன?.. மார்க் பகீர் பதிவு.!

முடங்கிய எக்ஸ்: இந்நிலையில் எக்ஸ் நேற்று இரவு 11 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டவுன் (X Down) ஆகியிருக்கிறது. 12 மணிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கணினி மற்றும் மொபைல் பயன்பாடு ஆகிய இரண்டு வகைகளிலும் வழக்கமான டவீட்களுக்குப் பதிலாக உங்கள் காலவரிசைக்கு வரவேற்கிறோம்' என்பதை மட்டுமே காட்டி வருகிறது. ஒரு மணி நேரத்துக்குள்ளேயே எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று 20 ஆயிரம் பேர் ரிப்போர்ட செய்திருக்கிறார்கள். மேலும், இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எக்ஸ் தளம் செயல்படவில்லை என்று பலர் தங்களது ஃபேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சமூக தளங்களின் செயல்பாடுகள் பற்றிய உடனடித் தகவல்களை பதிவிடும் தளமான Downdetectorலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் தளம் முடங்கியது பற்றி பதிவிட்டுக் கொண்டே இருந்தார்கள்.