UYEGP Scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.. UYEGP திட்டம் என்றால் என்ன?.. விபரம் உள்ளே.!

UYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

UYEGP (Photo Credit: @pazhassivarma1 X)

செப்டம்பர் 25, சென்னை (Chennai News): புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தடையே இந்த நிதி தான். புதிதாக தொழில் தொடங்குவபர்களுக்கு வங்கியோ அல்லது வெளியிலேயோ கடன் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. இதனால் தான் வேலையில்லாதவர்களுக்கு தொழில் ரீதியாக கடன்கள் வழங்க வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். திட்டத்தில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. Shankh Air: இந்தியாவில் புதிய விமான சேவை அறிமுகம்.. ஷாங்க் ஏர் பற்றிய முழு விவரம் உள்ளே..!

திட்டம்: வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் தொடங்கிட, தற்போதைய திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான மானியமும் ரூ.1.25 லட்சத்திலிருந்து, ரூ.3.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. UYEGP திட்டத்தின் கீழ், இளம் தொழில்முனைவோர் ரூ. 25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 15% மானியத்தில், தனிநபர்கள் தங்கள் வணிகத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறவும் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கப்படுகிறது. UYEGP திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME), கிராமத் தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தகுதி (Eligibility):