TCS Ends Work From Home: மீண்டும் அலுவலகத்தில் வேலை - டிசிஎஸ் பணியாளர்கள் உடனே வர அழைப்பு..!
இந்திய அளவில் மிகப்பெரிய பணியாளர்களை கொண்டுள்ள தனியார் நிறுவனம் டிசிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 29, மும்பை (Technology News): இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்விஸ் (Tata Consultancy Services TCS).
கடந்த 2020ன் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்நிறுவனம் தனது பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியது.
கொரோனா முடிவுக்கு பின்னரும் 25% பணியாளர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு திரும்பி வேலைபார்த்து வந்தனர். பிற அனைவரும் வீட்டில் இருந்தவாறு பணியாற்றினர். Minor Died Lightning Attack: மின்னல் தாக்கி 16 வயது சிறுவன் பரிதாப பலி: கடற்கரைக்கு ஆசையாக சென்ற சிறுவன் பிணமாக வீடுவந்த சோகம்.!
நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாட்களை மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பச்சொல்லி அதிரடியாக செய்திகள் அனுப்பியுள்ளது. தனது ஒவ்வொரு பணியாளருக்கும் இதுதொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறது.
வீட்டில் இருந்து பணியாற்றிய அனைவரும் அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக வேலையாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதால், மூத்த உறுப்பினர்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் சரிவர பலருக்கும் கிடைக்கவில்லை. அதேபோல, ஊழியர்களின் பலன்கள் அவர்களால் அனுபவிக்க இயலவில்லை. Karnataka Bandh: கர்நாடகாவில் பந்த்: 44 விமானங்கள் ரத்து: ஐந்து போராட்டக்காரர்கள் கைது.!
இதுபோன்ற பல கருத்துக்களின் காரணமாக டிசிஎஸ் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வேலைக்கு வரச்சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது. அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் வேலை கட்டாயம் என்ற அடிப்படையில் மீண்டும் பணியிடத்திற்கு அழைத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 6 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்ட தனியார் பெருநிறுவனம் ஆகும். இந்திய அளவில் மிகப்பெரிய பணியாளர்களை கொண்டுள்ள தனியார் நிறுவனம் டிசிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.