Tesla Partner With Tata: டெஸ்லாவுக்கு செமிகண்டக்டர் தயாரித்து வழங்கும் டாடா குழுமம்; கையெழுத்தான ஒப்பந்தம்.!
இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனத்துடன், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரித்து கொடுக்கும் பணிக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
ஏப்ரல் 16, புதுடெல்லி (Technology News): உலகளவில் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்யும் டெஸ்லா நிறுவனம் (Tesla), எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. டெஸ்லா கார் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் கார் ஆகும். இதில் முழுவதுமாக தானியங்கு முறையில் இயங்கும் கார் உற்பத்தி மற்றும் விற்பனை அங்கத்தையும் கொண்டுள்ளது. அது சார்ந்த சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பெற்று சாதனை.!
உலகளவில் கவனத்தை பெற்ற அணிகள்: டெஸ்லா நிறுவனம் தற்போது தனது காருக்கான உதிரி பாகங்களை உலகளவில் உள்ள முக்கிய நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. அந்த வகையில், தற்போது டாடா நிறுவனத்திடம் இருந்து டெஸ்லா செமி கண்டக்டர் உதிரி பாகத்தினை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக டாடா நிறுவனம் கூடுதல் இலாபம் மற்றும் முன்னேற்றத்திற்கான வழியை அடைந்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லாவும், இந்தியாவில் முதன்மை நிறுவனமான டாடாவும் மின்சார கார் உதிரி பாகம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது கவனத்தை பெற்றுள்ளது.