TCS Job Scandal: வேலை வாங்கித்தர கமிஷன்; ரூ.100 கோடி பணத்தை முறைகேடாக சம்பாதித்த TCS நிர்வாகிகள்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
3 ஆண்டுகளாக 3 இலட்சம் பேரை தேர்வு செய்துள்ள டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை ஆட்கள் தேர்வு அதிகாரிகள், வேலைக்காக இலஞ்சம் பெற்று வேலை வாங்கிக்கொடுத்து அம்பலமாகியுள்ளது.
ஜூன் 23, பெங்களூர் (Technology News): மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த டாடா கன்சல்டன்சி நிறுவனம் தொழில்நுட்ப பணியாளர்களை இலட்சக்கணக்கில் தேர்வு செய்து வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் மீது சமீபத்தில் பல பரபரப்பு குற்றசாட்டுகள் எழுந்தன.
அதாவது, நிறுவனத்தின் பெயரில் வேலை வாங்கித்தரும் பட்சத்தில், அதற்காக இலஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து, டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் ஒருவர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் – போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!
இதனைத்தவிர்த்து 4 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, சில பணியாளர்கள் நிறுவனத்தில் இருந்து தடை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த தகவலால் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு இலஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்த சூழலில், விசாரணையில் அனைத்தும் உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க TCS நிறுவனம் 3 பணியாளர்களை நியமனமும் செய்துள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில் வேலை வாங்கி கொடுப்பதாக ரூ.100 கோடி வரையில் இலஞ்சம் பெற்றதும் அம்பலமாகியுள்ளது. IND Vs WI Squad: ரோஹித் ஷர்மா தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இந்திய அணி; பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ.!
டாடா கன்சல்டன்சி நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானோரை ஐ.டி பணியில் அமர்த்தியுள்ளது. அவர்களிடம் இருந்து துல்லியமாக பெறப்பட்ட இலஞ்ச பணங்கள் குறித்த விவகாரம் தெரியவில்லை என்பதால், தோராயமாக ரூ.100 கோடி அளவிலான பணம் மட்டுமே இலஞ்சமாக பெறப்பட்டது உறுதியாகியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 6,14,795 பணியாளர்கள் வேலை பார்த்துவரும் நிலையில், அவர்கள் ஒரு நிமிடத்திற்கு ஒருவரை தேர்வு செய்து வருகின்றனர்.