Google Doodle Today: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024; இன்றைய அசத்தல் கூகுள் டூடுல் இதோ.!
உலகளவில் நடைபெறும் முக்கியமான விஷயங்களை தனது டூடுல் வழியே சிறப்பித்துக்கொடுக்கும் கூகுள் நிறுவனத்தின் இன்றைய டூடுல் வியக்கவைக்கிறது.
ஆகஸ்ட் 09, பாரிஸ் (World News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics 2024) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 10,500 க்கும் அதிகமான உலகளாவிய வீரர்-வீராங்கனைகள் 205 நாடுகளில் இருந்து கலந்துகொண்டனர். 320 க்கும் அதிகமான விளையாட்டு பிரிவுகளில் இவர்கள் விளையாடி, தங்களின் நாட்டுக்கான பதக்கத்தை வென்று வருகின்றனர். ஒவ்வொரு வெற்றியும் அந்தந்த நாட்டின் கௌரவங்களாக கவனிக்கப்படுகிறது. Vinesh Phogat Retirement: "போராட சக்தி இல்லை" - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு.!
நீலப்பறவை உற்சாகப்படுத்துகிறது:
ஆகஸ்ட் 11ம் தேதியுடன் நிறைவுபெறும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள், தனது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 09ம் தேதியான இன்று 16 நாடுகளை சேர்ந்த 32 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் கலந்துகொள்கின்றனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கை கூகுள் நிறுவனம் தனது டூடுல் கொண்டு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான கூகுள் டூடுல் வைரலாகி வருகிறது. நீலப்பறவை சுழன்று விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.